‘வெஸ்ட் இண்டீஸ் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது’ – ரோகித் சர்மா

இளம் வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து, அவர்களுக்கான சரியான வாய்ப்பை வழங்க கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் வென்று தொடரை வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறது இந்தியா. ஆசிய கோப்பை, சொந்த மண்ணில் உலகக் கோப்பை தொடர்கள் நடைபெறவிருக்கிற நிலையில், இத்தொடர் இந்திய அணிக்கு அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது. குறிப்பாக, உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இந்த ஆட்டங்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதப்பாருங்க> அதிவேக 100 ரன்கள்; இலங்கையின் சாதனையை தகர்த்த இந்திய அணி! ஒரே போட்டியில் இவ்வளவு சாதனைகளா!

இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அந்த வீடியோவில் ரோகித் சர்மா , ”வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பல புதிய வீரர்கள் இங்கே இணைந்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு சரியான வாய்ப்பு கொடுப்பது முக்கியம். அவர்களுக்கு ஒரு ரோல் கொடுத்து அந்த ரோலில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு முன்பு அணியில் இருந்த புதிய வீரர்களுக்கும் இவ்வாறுதான் ரோல் கொடுத்திருந்தோம்.

உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக 10 முதல் 12 ஒருநாள் போட்டிகளில் நாங்கள் விளையாட இருக்கிறோம். உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு இந்த ஆட்டங்கள் போதுமானது. சரியான காம்பினேஷன் மற்றும் உலகக் கோப்பைக்கான திட்டங்களையும் இந்த போட்டிகள் மூலம் உருவாக்க முடியும் என்று நினைக்கிறேன். இந்திய அணியை குறித்து மக்கள் பேசுவது பற்றியோ, வெளியில் என்ன விமர்சனங்கள் வருகிறது என்பது பற்றி கொஞ்சமும் கவலையில்லை. எங்களுக்கு வெற்றி மட்டுமே ஒரே குறிக்கோள்.

இதப்பாருங்க> இந்திய பந்துவீச்சாளர்களில் பஜ்ஜியின் சர்வதேச விக்கெட் எண்ணிக்கையை முறியடித்து ரவி அஸ்வின் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய அணியில் உள்ள ஏராளமான அனுபவ வீரர்கள் பற்றி நாம் பேச வேண்டிய தேவையே இல்லை. ஏனென்றால் அவ்வளவு போட்டிகளில் வீரர்கள் விளையாடி தங்களை நிரூபித்து விட்டார்கள். ஆயிரக்கணக்கான ரன்களும், நூற்றுக்கணக்கான விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்காக போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்கள். அதனால் எங்களின் கவனம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து, அவர்களுக்கான சரியான வாய்ப்பை வழங்குவதில் மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் விலைமதிக்க முடியாத வீரர். அவரின் அனுபவமும், திறமையும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்றே நினைக்கிறேன். அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. முழு உடற்தகுதியை எட்டிய பின் அவர் இந்திய அணிக்கு திரும்புவார்” என்றார்.

இதப்பாருங்க> இந்தியா – பாக். மோதும் உலகக்கோப்பை போட்டிக்கான தேதி மாற வாய்ப்பு! நவராத்திரி காரணமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *