11 சிஸ்சர், 28 பவுண்டரிகள், 244 ரன்கள்; இங்கிலாந்தில் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்!
இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா 153 பந்துகளில் 244 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் கவுண்டி அணிகளுக்கிடையேயான ஒருநாள் கோப்பை போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி அடுத்த மாதம் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், நார்தாம்ப்டன்ஷைர் அணிக்காக இந்திய வீரர் பிரித்வி ஷா ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.
இதப்பாருங்க> “மிடில் ஆர்டர் வீரராக என்ன செய்யவேண்டும் என கோலி கூறினார்”- ODI தொடரை வென்ற பின் ஹர்திக் நன்றி!
அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 9) சோமர்செட் மற்றும் நார்தாம்ப்டன்ஷைர் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் ஜெயித்த நார்தாம்ப்டன்ஷைர் அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதில் தொடக்க பேட்டர்களாகக் களமிறங்கிய எல்லா வீரர்களுமே சிறப்பான ஆட்டத்தை அளித்தனர். அதிலும் இந்திய வீரரான பிரித்வி ஷா அதிரடி காட்டினார்.
இதப்பாருங்க> “ரோகித் சர்மா நல்ல கேப்டன் தான்.. ஆனால் தோனியிடம் இருந்தது அவரிடம் இல்லை” – யுவராஜ் சிங்!
தொடக்க வீரராக களம் கண்ட பிரித்வி ஷா இந்தத் தொடரில் இங்கிலாந்தில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியில் வேகம் காட்டிய அவர், சோமர்செட் பந்துவீச்சாளர்களை ஒரு முனையில் நின்றுகொண்டு வதம் செய்தார். அவர், 153 பந்துகளில் 244 ரன்கள் எடுத்தார். அதில் 28 பவுண்டரிகளும், 11 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் பிரித்வி ஷா இங்கிலாந்து மண்ணில் லிஸ்ட் ஏ போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். இறுதியில் அந்த அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 415 ரன்கள் எடுத்துள்ளது. பின்னர் ஆடிய சோமர்செட் அணி 40.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை எடுத்திருந்தது.