“திலக் வர்மா அபார திறன் படைத்த வீரர்” – கேப்டன் ரோகித் சர்மா

திலக் வர்மா அபார திறன் படைத்த வீரர் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் திலக் வர்மா விளையாடி வருகிறார். இந்த தொடரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

20 வயதான திலக் வர்மா, கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியை கேப்டனாக வழிநடத்துவது ரோகித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது ஆட்டத்தை வியந்து இந்திய அணி வீரர்கள் மட்டுமல்லாது பிற அணிகளை சேர்ந்த வீரர்களும் பாராட்டி உள்ளனர்.

இதப்பாருங்க> இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஒன்பது உலகக் கோப்பை போட்டிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் நிக்கோலஸ் பூரன், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டெவால்ட் பிரெவிஸ் போன்ற வீரர்களும் வாழ்த்தி உள்ளனர். இந்த சூழலில் ரோகித் சர்மா, திலக் வர்மா குறித்து பேசியுள்ளார்.

இதப்பாருங்க> “சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்த இதுவே சிறந்த தருணம்”-INDvPAK போட்டி குறித்து பாக். முன்னாள் வீரர்

“திலக் வர்மா மிக திறமையான வீரர். அவருக்குள் ஒரு ஆவல் உள்ளது. அதுதான் ஒரு வீரருக்கு வேண்டும். அவருடன் நான் பேசும் போதெல்லாம் அவர் கொண்டிருக்கும் முதிர்ச்சி திறனை என்னால் உணர முடிகிறது. களத்தில் எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்துள்ளார். எப்போது அடித்து ஆட வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்துள்ளார்” என ரோகித் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *