அந்த மனசு தான் சார் கடவுள்… இலங்கைக்கு பல மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கும் ஆஸி.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்றது. இதன் போது அவுஸ்திரேலிய அணியினர் பல அமெரிக்க டொலர்களை பரிசாக வென்றனர். இவ்வாறான ஒரு நிலையில் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் இலங்கை சுற்றுப்பயணத்தின் பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்குகின்றனர்.

யுனிசெப் அமைப்பின் அவுஸ்திரேலிய தூதுவராக இருக்கும் பெட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகியோரின் தலைமையில், இந்த குழு 45 ஆயிரம் ஆஸி. டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது. அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் நன்கொடையாக வழங்கும் நிதியானது, தேவையிலுள்ள 1.7 மில்லியன் பாதிக்கப்படக்கூடிய இலங்கைக் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், கல்வி மற்றும் மனநலச் சேவைகளை ஆதரிப்பதற்கான யுனிசெப்பின் திட்டங்களுக்குச் செல்கிறது.