2.71 எகானமி, 2 விக்கெட்டுகள்… பும்ராவின் இன்னொரு மாஸ் பெர்ஃபாமன்ஸ்..!

பும்ரா, சிராஜ், ஹர்திக், குல்தீப், ஜடேஜா என 5 இந்திய பந்துவீச்சாளர்களுமே பாகிஸ்தானுக்கு எதிராக தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்கள். ஆனால் பும்ராவுக்கு ஏன் ஆட்ட நாயகன் விருது?

போட்டி 12: இந்தியா vs பாகிஸ்தான்

முடிவு: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி (பாகிஸ்தான் 191 ஆல் அவுட், 42.5 ஓவர்கள்; இந்தியா 192/3, 30.3 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: ஜஸ்ப்ரித் பும்ரா (இந்தியா)
பௌலிங்: 7-1-19-2

இதப்பாருங்க> பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் களமிறங்குவாரா?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிந்ததும் பும்ராவுக்கு ஏன் ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்படவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்க பூமியாக இருந்த அந்த மைதானத்தில் நான்குக்கும் குறைவான எகானமியில் பந்துவீசி நான்கு விக்கெட்டுகளும் வீழ்த்தினார் பும்ரா. அந்த ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இந்தப் போட்டியில் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்கிறது ஐசிசி. ஆனால் இதுவும் சும்மா கொடுத்துவிடவில்லை. இந்தப் போட்டியிலும் மாபெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் பூம் பூம் பும்ரா.

இதப்பாருங்க> தவறான ஜெர்சியை அணிந்து களத்திற்கு வந்த விராட் கோலி! பின்னர் என்ன செய்தார் பாருங்கள்!

பும்ரா, சிராஜ், ஹர்திக், குல்தீப், ஜடேஜா என 5 இந்திய பந்துவீச்சாளர்களுமே பாகிஸ்தானுக்கு எதிராக தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்கள். ஆனால் பும்ராவுக்கு ஏன் ஆட்ட நாயகன் விருது? மிடில் ஓவரில், முக்கியமான கட்டத்தில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமல்லாமல், மற்ற ஃபேஸ்களிலும் மிகச் சிறப்பாக சிக்கனமாகப் பந்துவீசினார் அவர். 4 ஓவர்கள் கொண்ட தன் முதல் ஸ்பெல்லில் வெறும் 14 ரன்களே கொடுத்தார். அதில் ஒரு மெய்டன் வேறு. இரண்டாவது ஸ்பெல் வீச வந்தவுடனேயே ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பக்கம் கொண்டுவந்தார். தடுமாறிக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியின் தூணாய் நின்றிருந்த முகமது ரிஸ்வானை (49 ரன்கள்) தன் இரண்டாவது ஸ்பெல்லின் ஆறாவது பந்திலேயே காலி செய்தார். அடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஷதாப் கான் விக்கெட்டும் போனது. இரண்டாவது ஸ்பெல்லில் 3 ஓவர்கள் வீசி ஐந்தே ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள். அந்த ஸ்பெல் முடிந்த சில ஓவர்களிலேயே பாகிஸ்தான் இன்னிங்ஸே முடிவுக்கு வந்தது. இதுதான் பும்ரா எனும் மாஸ்டர் பௌலர் ஏற்படுத்திய தாக்கம்.

இதப்பாருங்க> அசைக்க முடியாத வரலாறு..பாகிஸ்தானை 8வது முறையும் சாய்த்த இந்திய அணி-ஒரே போட்டியில் நிகழ்ந்த சாதனைகள்!

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

ஆட்ட நாயகன் விருது பெற்ற பும்ராவிடம் அவர் ஆடுகளத்தின் தன்மையை சரியாக உணர்ந்துகொள்வது பற்றிக் கேட்கப்பட்டது. “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாக எப்போதுமே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆடுகளத்தை அலசி ஆராய்ந்துவிட நினைப்போம். விக்கெட் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டோம். அதனால் லென்த் சரியாக வீசவேண்டும் என்று முடிவு செய்தோம். அவர்கள் பேட்டிங் செய்வதை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கடினமாக்க வேண்டும் என்று நினைத்தோம். எப்போதுமே ஓரளவு எச்சரிக்கையாக இருப்பதால் ஆடுகளத்தை நன்கு புரிந்துகொள்கிறேன் என்று நினைக்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோதே எப்போதும் நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பேன். அதெல்லாம் இப்போது நன்றாக உதவுகிறது என்று நினைக்கிறேன். இப்போது ஓரளவு அனுபவம் பெற்றுவிட்டேன். ஆனால் இளைஞனாக இருந்தபோது என்னால் சீனியர்கள் ரொம்பவே சிரமப்பட்டார்கள். கேள்விகளாக கேட்டுக்கொண்டே இருப்பேன். ஆனால் அது ஆடுகளத்தை நன்றாக புரிந்துகொள்ளவும், பல ஆப்ஷன்களைப் பரிசோதித்துப் பார்க்கவும் உதவியது” என்று கூறினார்.

இதப்பாருங்க> இந்தியா – பாகிஸ்தான் போட்டி: களமிறக்கப்பட்ட ஷுப்மன் கில்.. முதல் விக்கெட்டை சாய்த்தார் முகமது சிராஜ்

முகமது ரிஸ்வான் விக்கெட்டை ஸ்லோ பால் மூலம் வீசியது பற்றிக் கேட்கப்பட்டபோது, “நாங்கள் மிடில் ஓவர்களில் பந்துவீசியபோது ஜடேஜாவின் ஓவரை கவனித்தேன். அவரது பந்துகள் திரும்பியது. அதிகம் இல்லாவிட்டாலும், ஓரளவு திரும்பியது. என்னுடைய ஸ்லோ பாலை நான் ஒரு ஸ்பின்னரின் ஸ்லோ பாலாகக் கருதினேன். அதிர்ஷ்டவசமாக இன்று அது சரியாகப் பயன் கொடுத்துவிட்டது” என்றார். ஷதாப் விக்கெட் பற்றியும் பேசிய அவர், “ஒருகட்டத்தில் சில நிமிடங்கள் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. அந்த வைட் பால் ரிவர்ஸ் ஆன மிகவும் அரிய தருணம் அது. அதை நான்றாகப் பயன்படுத்திக்கொண்டேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *