Cricket

ஹர்திக் பாண்டியாவுக்கு நிகர் யார்.. மூவரில் யாருக்கு ஆட்டம்? ரோகித் கையில் இறுதி முடிவு!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதில் யாரைக் களமிறக்குவது என பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

இந்தியாவில் நடைபெறும் 13வது ஒருநாள் உலகக்கோப்பை தொடர்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13வது ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் போட்டிபோட்டபடி, புள்ளிப் பட்டியலில் முன்னேறுவதற்கு முயன்று வருகின்றன.

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo2ODkxLCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA2ODkxIC0g4K6a4K6a4K+N4K6a4K6/4K6p4K+NIOCun+CvhuCuo+CvjeCun+CvgeCusuCvjeCuleCusOCuv+CuqeCvjSDgrq7grr/grpXgrqrgr43grqrgr4bgrrDgrr/grq8g4K6q4K+H4K6f4K+N4K6f4K6/4K6Z4K+NIOCumuCuvuCupOCuqeCviOCur+CviCDgrrXgrr/grrDgrr7grp/gr40g4K6V4K+L4K6y4K6/IOCuruCvguCun+Cuv+CuqeCuvuCusOCvjSIsInVybCI6IiIsImltYWdlX2lkIjo2ODk3LCJpbWFnZV91cmwiOiJodHRwczovL3ZpcmFsNDhwb3N0LmNvbS93cC1jb250ZW50L3VwbG9hZHMvMjAyMy8xMC9Dcmlja2V0LTE3LnBuZyIsInRpdGxlIjoi4K6a4K6a4K+N4K6a4K6/4K6p4K+NIOCun+CvhuCuo+CvjeCun+CvgeCusuCvjeCuleCusOCuv+CuqeCvjSDgrq7grr/grpXgrqrgr43grqrgr4bgrrDgrr/grq8g4K6q4K+H4K6f4K+N4K6f4K6/4K6Z4K+NIOCumuCuvuCupOCuqeCviOCur+CviCDgrrXgrr/grrDgrr7grp/gr40g4K6V4K+L4K6y4K6/IOCuruCvguCun+Cuv+CuqeCuvuCusOCvjSIsInN1bW1hcnkiOiIiLCJ0ZW1wbGF0ZSI6ImJhc2ljIn0=”]

இந்தப் பட்டியலில், இந்திய அணி, தாம் சந்தித்த 4 போட்டிகளிலும் (ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம்) வெற்றிபெற்று வீறுநடை போட்டு வருவதுடன், புள்ளிப் பட்டியலிலும் 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. 3 மற்றும் 4வது இடங்களில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. இந்தத் தொடரில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

வங்கதேச போட்டியின்போது காயம்பட்ட ஹர்திக் பாண்டியா
இந்த நிலையில், நேற்று (அக்.19) புனேயில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின்போது வங்கதேச அணிக்கு எதிராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீசினார். அவரது பந்துவீச்சை வங்கதேச அணியின் தொடக்க பேட்டர் லிட்டன் தாஸ் எதிர்கொண்டு விளையாடினார். இதில், லிட்டன் தாஸ் நேராக அடித்த பந்து ஒன்றை காலால் தடுக்க முயன்று கீழே விழுந்த பாண்டியாவுக்கு வலது கால் முட்டியில் அடிபட்டது.

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo2ODkzLCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA2ODkzIC0g4K6a4K+B4K6q4K+N4K6u4K6p4K+NIOCuleCuv+CusuCvjSDgrqrgrqjgr43grqTgr4HgrrXgr4Dgrprgr43grprgr4Et4K6u4K+B4K6k4K6y4K+NIOCuieCupOCvjeCupOCuvyDgrq7grrHgr43grrHgr4Hgrq7gr40g4K6H4K6o4K+N4K6k4K6/4K6v4K6+4K614K6/4K6p4K+NIOCuquCvh+Cun+CvjeCun+Cuv+CumeCvjSDgroXgrqPgr4HgrpXgr4Hgrq7gr4HgrrHgr4gg4K6q4K6x4K+N4K6x4K6/IOCuquCvh+CumuCvgeCuleCuv+CuseCuvuCusOCvjSIsInVybCI6IiIsImltYWdlX2lkIjo2ODk0LCJpbWFnZV91cmwiOiJodHRwczovL3ZpcmFsNDhwb3N0LmNvbS93cC1jb250ZW50L3VwbG9hZHMvMjAyMy8xMC9Dcmlja2V0LTE2LnBuZyIsInRpdGxlIjoi4K6a4K+B4K6q4K+N4K6u4K6p4K+NIOCuleCuv+CusuCvjSDgrqrgrqjgr43grqTgr4HgrrXgr4Dgrprgr43grprgr4Et4K6u4K+B4K6k4K6y4K+NIOCuieCupOCvjeCupOCuvyDgrq7grrHgr43grrHgr4Hgrq7gr40g4K6H4K6o4K+N4K6k4K6/4K6v4K6+4K614K6/4K6p4K+NIOCuquCvh+Cun+CvjeCun+Cuv+CumeCvjSDgroXgrqPgr4HgrpXgr4Hgrq7gr4HgrrHgr4gg4K6q4K6x4K+N4K6x4K6/IOCuquCvh+CumuCvgeCuleCuv+CuseCuvuCusOCvjSIsInN1bW1hcnkiOiIiLCJ0ZW1wbGF0ZSI6ImJhc2ljIn0=”]

இதையடுத்து, அவருக்கு மைதானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. ஆயினும், அவருக்கு வலி அதிகமானதால் மைதானத்தைவிட்டு வெளியேறினார். அப்போது அவர் 3 பந்துகள் வீசியிருந்தார். இதையடுத்து, மீதமுள்ள 3 பந்துகளை (1 ஓவருக்கு 6 பந்துகள்) நீண்டநாட்களுக்குப் பிறகு விராட் கோலி வீசினார். தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவுக்குப் பதில் சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங் செய்தார்.

ஹர்திக் பாண்டியாவுக்குப் பதில் யார்? ரேஸில் மூவர்!
ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, அவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான் எனக் கூறப்பட்ட நிலையில், பிசிசிஐயும் அதை உறுதி செய்துள்ளது. ஹர்திக் அணியில் விளையாடாதது இந்தியாவுக்குப் பின்னடைவுதான் என்றாலும், காயம் காரணமாக அவர் இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் அணி நிர்வாகம் உள்ளது. இதையடுத்து அந்த இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி, அதிரடி பேட்டர் சூர்யகுமார் யாதவ், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo2ODg4LCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA2ODg4IC0g4K6o4K6/4K6v4K+C4K6a4K6/4K6y4K6+4K6o4K+N4K6k4K+B4K6f4K6p4K+NIOCuruCvgeCupOCusuCvjeCuqOCuv+CusuCviCDgrq7gr4vgrqTgrrLgr4HgrpXgr43grpXgr4Eg4K6u4K+B4K6p4K+N4K6p4K6k4K6+4K6VIOCuh+CuqOCvjeCupOCuv+Cur+CuvuCuteCvgeCuleCvjeCuleCvgSDgrqrgr4bgrrDgr4Hgrq7gr40g4K6F4K6f4K6/IiwidXJsIjoiIiwiaW1hZ2VfaWQiOjY4ODksImltYWdlX3VybCI6Imh0dHBzOi8vdmlyYWw0OHBvc3QuY29tL3dwLWNvbnRlbnQvdXBsb2Fkcy8yMDIzLzEwL0NyaWNrZXQtMTUucG5nIiwidGl0bGUiOiLgrqjgrr/grq/gr4Lgrprgrr/grrLgrr7grqjgr43grqTgr4Hgrp/grqngr40g4K6u4K+B4K6k4K6y4K+N4K6o4K6/4K6y4K+IIOCuruCvi+CupOCusuCvgeCuleCvjeCuleCvgSDgrq7gr4Hgrqngr43grqngrqTgrr7grpUg4K6H4K6o4K+N4K6k4K6/4K6v4K6+4K614K+B4K6V4K+N4K6V4K+BIOCuquCvhuCusOCvgeCuruCvjSDgroXgrp/grr8iLCJzdW1tYXJ5IjoiIiwidGVtcGxhdGUiOiJiYXNpYyJ9″]

ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக முகம்மது ஷமியா?
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நடப்புத் தொடரில் ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருகிறார் என்கிற விமர்சனம் உள்ளது. இதையடுத்து அவருக்குப் பதில் முகம்மது ஷமியை முழு நேர வேகப்பந்து வீச்சாளராகப் பயன்படுத்தலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாண்டியாவுக்குப் பதிலாக தமிழக வீரர் அஸ்வின்?
அதுபோல் காயம்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்குப் பதில் தமிழக வீரர் அஸ்வினைக் களமிறக்கலாம் எனவும் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அஸ்வின் திறமைவாய்ந்த சுழல் பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல், நல்ல பேட்டராகவும் உள்ளார். கடைசிகட்டத்தில் சிறப்பாக ஆடக்கூடியவர் என்ற நற்பெயரும் அவருக்கு உள்ளது. இதனால், இந்திய அணி அடுத்த போட்டியில் அவரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர்.

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo2ODgyLCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA2ODgyIC0g4K6O4K6p4K+N4K6pIOCuh+CupOCvgSDgrrXgr4jgrp/gr40g4K6H4K6y4K+N4K6y4K+I4K6v4K6+PyDgrpLgrrDgr4HgrrXgr4fgrrPgr4gg4K6F4K614K6w4K+B4K6u4K+NIOCusOCumuCuv+CuleCusOCuviDgrofgrrDgr4Hgrqrgr43grqrgrr7grrDgr4shIOCuteCuv+CusOCuvuCun+CvjSDgrpXgr4vgrrLgrr8g4K6a4K6k4K6u4K+NIOCuheCun+Cuv+CuleCvjeCulSDgrongrqTgrrXgrr/grqngrr7grrDgrr4g4K6F4K6u4K+N4K6q4K6v4K6w4K+NISIsInVybCI6IiIsImltYWdlX2lkIjo2ODgzLCJpbWFnZV91cmwiOiJodHRwczovL3ZpcmFsNDhwb3N0LmNvbS93cC1jb250ZW50L3VwbG9hZHMvMjAyMy8xMC9Dcmlja2V0LTE0LnBuZyIsInRpdGxlIjoi4K6O4K6p4K+N4K6pIOCuh+CupOCvgSDgrrXgr4jgrp/gr40g4K6H4K6y4K+N4K6y4K+I4K6v4K6+PyDgrpLgrrDgr4HgrrXgr4fgrrPgr4gg4K6F4K614K6w4K+B4K6u4K+NIOCusOCumuCuv+CuleCusOCuviDgrofgrrDgr4Hgrqrgr43grqrgrr7grrDgr4shIOCuteCuv+CusOCuvuCun+CvjSDgrpXgr4vgrrLgrr8g4K6a4K6k4K6u4K+NIOCuheCun+Cuv+CuleCvjeCulSDgrongrqTgrrXgrr/grqngrr7grrDgrr4g4K6F4K6u4K+N4K6q4K6v4K6w4K+NISIsInN1bW1hcnkiOiIiLCJ0ZW1wbGF0ZSI6ImJhc2ljIn0=”]

சூர்யகுமார் யாதவ்வுக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா?
அதேநேரத்தில் வேறு சிலரோ, அதிரடி பேட்டரான சூர்யகுமார் யாதவை களமிறக்கலாம் என்கின்றனர். ஒருவேளை ஷர்துல் தாக்கூரை நீக்கும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக முகம்மது ஷமி சேர்க்கப்பட்டால், ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக பேட்டரான சூர்யகுமார் யாதவை களமிறக்குவதுதான் இந்திய அணிக்கு பலமாக இருக்கும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படி கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தாலும், இவர்கள் மூவரும் (ஷமி, சூர்யகுமார் யாதவ், அஸ்வின்) ஹர்திக் பாண்டியா அளவுக்கு நேரடி மாற்று வீரர்கள் இல்லை என்பதே நிதர்சனம். ஆனாலும், ஒருவகையில் அவர்கள் மூவரில் ஒருவரை வைத்தே கேப்டன் ரோகித் சர்மா பாண்டியா இழப்பை ஈடுகட்ட வேண்டும். இன்னும் சிலர், ரோகித் சூர்யகுமாருக்கு வாய்ப்பளிப்பார் என்கின்றனர்.

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo2ODc2LCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA2ODc2IC0g4K6a4K6/4K6Z4K+N4K6V4K6/4K6z4K+NIOCujuCun+CvgeCuleCvjeCulSDgrq7grrHgr4HgrqTgr43grqTgrqTgr4Eg4K6v4K6+4K6w4K+NPyDgrpXgrrPgrqTgr43grqTgrr/grrLgr40g4K6o4K6f4K6o4K+N4K6k4K6k4K+BIOCujuCuqeCvjeCuqT8gLSDgrongrqPgr43grq7gr4jgrq/gr4gg4K6J4K6f4K+I4K6k4K+N4K6k4K+BIOCumuCviuCuqeCvjeCuqSDgrpXgr4cu4K6O4K6y4K+NLuCusOCuvuCuleCvgeCusuCvjSIsInVybCI6IiIsImltYWdlX2lkIjo2ODc3LCJpbWFnZV91cmwiOiJodHRwczovL3ZpcmFsNDhwb3N0LmNvbS93cC1jb250ZW50L3VwbG9hZHMvMjAyMy8xMC9Dcmlja2V0LTEzLnBuZyIsInRpdGxlIjoi4K6a4K6/4K6Z4K+N4K6V4K6/4K6z4K+NIOCujuCun+CvgeCuleCvjeCulSDgrq7grrHgr4HgrqTgr43grqTgrqTgr4Eg4K6v4K6+4K6w4K+NPyDgrpXgrrPgrqTgr43grqTgrr/grrLgr40g4K6o4K6f4K6o4K+N4K6k4K6k4K+BIOCujuCuqeCvjeCuqT8gLSDgrongrqPgr43grq7gr4jgrq/gr4gg4K6J4K6f4K+I4K6k4K+N4K6k4K+BIOCumuCviuCuqeCvjeCuqSDgrpXgr4cu4K6O4K6y4K+NLuCusOCuvuCuleCvgeCusuCvjSIsInN1bW1hcnkiOiIiLCJ0ZW1wbGF0ZSI6ImJhc2ljIn0=”]

கேப்டன் ரோகித்தின் கையில் இறுதிமுடிவு!
சூர்யகுமாரின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கிறாக ரோகித் அவரைத் தேர்வு செய்யலாம் என்பதே பலரின் கருத்தும். அத்துடன் அவர் ஐபிஎல் போட்டியில் ரோகித் தலைமையில் மும்பை அணியில் ஆடி வருபவர். இதனால் அவருக்கு 100 சதவிகித வாய்ப்புகள் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் ஏற்கெனவே, உலகக்கோப்பை தொடர்களில் விளையாடி இருப்பதால் ஷர்துல் தாக்கூருக்குப் பதில் ஷமியும், பாண்டியாவிற்குப் பதில் சூர்யகுமாரும் களமிறக்கப்படலாம். எனினும், இதன் இறுதிமுடிவு கேப்னின் கையில்தான் உள்ளது என்கின்றனர். இவர்களில் ஆடப்போவது யார் என்பது கட்டாயம் அக். 22ஆம் தேதி தெரிந்துவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button