உலகை வணிகத்தால் கட்டமைத்த அமெரிக்காவை கண்டுப்பிடித்தது கொலம்பஸ் என வரலாறு கூறுவதுண்டு. ஆனால், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ் 1492ல் இந்தியாவைத் தேடி அமெரிக்காவை அடைவதற்கு முன்னரே தமிழர்கள் அமெரிக்காவில் குடியேறினர் எனக் கடல்சார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ் 1492ல் இந்தியர்களைக் கண்டுபிடிக்கக் கடல் வழிப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது, அட்லாண்டிக் கடற்கரை வழியான பயணத்தில் அமெரிக்கை என்ற மலை அருகில் செவ்விந்தியர்களை கண்டறிந்தார். அதனையே, அமெரிக்கா என வரையறுத்து, அமெரிக்கர்களைக் கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.
ஐரோப்பியர்கள் 1,500ம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு கடல் பயணம் மேற்கொண்டு, அங்கிருந்த பல பழங்குடிகளின் வரலாற்றை மறைத்து அமெரிக்க நாகரீகத்தை உருவாக்கினார்கள். ஆனால், அமெரிக்காவில் 1,500 ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளாக இருந்த அமெரிக்க பழங்குடியினருடன் தமிழர்கள் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளனர். இதனை நிரூபிக்கும் வகையில், அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினரின் வரலாற்றில் தமிழர்கள் தொன்மம் ஏராளம் நிறைந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பாறை ஓவியங்களில் சுமாா் 30 பழங்குடி இனங்களின் வரலாறு பதிந்துள்ளது. இங்குதான் அமெரிக்காவிலேயே அதிகமான பாறை ஓவியங்கள் உள்ளன. அலமேடா (Alameda) என்னும் ஊர், ‘மரங்கள் சூழ்ந்த நிழற்பகுதி’ என்ற பொருளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தப் பெயர் ‘ஆலமரம்’ என்பதில் இருந்து மருவி இவ்வாறு உருவாகியுள்ளது. முருங்கைக் கீரை Moringa leaf என்ற பெயரிலேயே விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட செம்பருத்தி செடியும் அரளி செடியும் கலிஃபோர்னியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் உள்ளது.
சான்டா பாா்பரா பகுதியில் வாழ்ந்த சுமாஸ் (Chumash) பழங்குடிகளின் இன்றைய தலைமுறையினர் ஆமை படத்தைத் தங்கள் கொடியில் வைத்துள்ளாா்கள். இதன் மூலம், கடல்சார்புடன் தொடர்புடையவர்கள் பழங்குடியினர் என்பதை விளக்கும் வகையில் உள்ளது. உலகிற்கு முதன் முதலில் “சோழியை” பணமாக அறிமுகப்படுத்தியவர்கள் பாண்டியர்கள் தான். அந்தச் சோழியின் ஆங்கிலப்பெயர் கவுரியெனக் கொள்ளப்படுகிறது.
தமிழ் இலக்கியங்கள் பாண்டியர்களைக் கவுரியர்கள் என்று ஆவணப்படுத்தி உள்ளது. இதன் மூலம், ஆப்ரிக்கா முதல் அமெரிக்கா வரை கவுரியை காசாக அறிமுகப்படுத்தியர்கள் பாண்டியர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கலன்கள் செய்யப்பயன்படும் மாக்கல் கொண்டு, அமெரிக்காவின் கேடலினா தீவில் வாழ்ந்த பழங்குடிகள் (Gabrielino) மாக்கல் கொண்டு சமையல் கலன்கள் செய்து வருகின்றனர்.
பழங்குடிகளின் வழிபாட்டு இடத்தில் தமிழர்களைப் போன்று சூரியன் மற்றும் சந்திரன் படங்களையும் வரைந்து வைத்துள்ளனர். இவர்களின் நம்பிக்கைகளில் காக்கை, ஆந்தை மற்றும் பருந்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். பெண்கள் பூக்களை தலையில் சூடியும், கழுத்தில் சுற்றியும் (Hawaiian leis போன்று), காதுகளில் வைத்தும் தமிழர்களைச் சேர்ந்தவர்களைப் போன்று அழகு படுத்திக் வருகின்றனர்.
யோகுட் (Yokut) என்ற பழங்குடிகளின் ஒரு குழு, தங்களின் உட்பிரிவுகளுக்குப் பறவை மற்றும் மிருகங்களின் பெயரை வைத்திருக்கிறாா்கள். தாஹோ (Lake Tahoe) பகுதியில் வாழ்ந்த Wahoe குடியினர் புல்லாங்குழல் பயன்படுத்துகிறாா்கள். முக்கியமாகத் தமிழர்களின் நாட்டார் கலையின் முக்கிய இசைக்கருவியான பறையை போன்று மற்றொரு இசைக் கருவி நினைவுபடுத்துவதாக உள்ளது. பழங்குடிகளின் கழுகாட்டம் நம்மூர் மயிலாட்டத்தை போன்று உள்ளது.
அமெரிக்க பழங்குடியினரும், தமிழர்களும் ஒன்றோடு, ஒன்றிணைந்து தொடர்புக் கொண்டவர்கள் என்பதை விளக்கும் வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்த பழங்குடி மக்கள் தங்களின் குடும்பத்தினர் பெயரில் தமுலிபாஸ்(tamilipas), தமியன்(thamiyan), தமுக்கன்(tammuka/tamcan), சாலினன்(salinan), பயட்டு(paiute), களரிபயட்டு(kalariyaddu), யானை(yana), முகவாய்(mohave). ஈழம்(yelamu), தொலைவு(tolowa), தொங்குவன்(tongva), தெற்கு மேடு, சாஸ்தா southern maidu. .since southern is therku இப்படி பல தமிழ் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அரிசோனா மாகாணத்தில் வாழ்ந்த பழங்குடியினர் உணவு முறையில் அரிசி, தினை, கிழங்கு வகைகள் போன்றவை தமிழர் முல்லை நில மக்களின் உணவு முறையோடு ஒத்துபோகின்றது.
அரிசோனாவுக்கு மேற்கே இருக்கும் சான் பிரான்சிஸ்கோ peak ல் தனது முன்னோரின் ஆன்மா வசிப்பதாகவே இன்றும் கருதுகின்றனர். முக்கியமாக விஸ்கான்சின் மாகாணத்தின் மிகப்பெரிய பழங்குடியின் தெய்வம் menominee tribe (மனோன்மணி) என்பதும், அகத்தியர் வழிப்பாட்டை நினைவுப்படுத்தும் அகத்தியர் சிகரம் Agazzis peak அங்கே உள்ளது. விஸ்கானிஸ்னில் வசிக்கும் ஆய்வாளர் ரேணுகா தேவி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதுபோல, தமிழர்களின் சித்தர் வழிமுறையைப் பழங்குடியினர்கள் பின்பற்றுவதாக அமைந்துள்ளது.
பழந் தமிழரின் மூதாதையர் வழிபாடு, இயற்கை வழிபாடு போன்றவற்றை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக உள்ளது. சூரிய சந்திரனின் பயணங்களை வைத்துத் தமது விவசாயத்தை நடைமுறைபடுத்தி வருகின்றனர். விஸ்கான்சின் (wisconsin) மாகாணத்தின் முக்கிய பழங்குடி மக்களான சிப்பிவா இந்தியர்களில் வழக்கத்தில் இருக்கும் ஒசிபி இனத்தவரின் பூர்வீக கதை ஆமை வழித்தடக் கூற்றை உறுதி செய்யும் விதம் உள்ளது.
அமெரிக்க, கனாடா நாட்டின் கிழக்குக்கரையாரேங்களில் வசித்த கியூபக் பழங்குடியினரின் நம்பிக்கைகளில் ஏழு கடல் தெய்வங்களில் (miigi-luminant with 7 colors.sapta kanni) ஒன்று, வெள்ளை இனத்தவரால் துன்பம் வரும் என்றும், அதனால் மேற்கு நோக்கிப் போக வேண்டாம் என்றும் அறிவுறுத்தி மேற்கு நோக்கி நகர்ந்தனர். அப்படி அவர்கள் சென்ற ஏழு இடங்கள் (Saint Lawrance river, ottawa river, Lake Nipissing and then to the great lakes of Wisconsin) ஆமை வழியைப் பின்பற்றிச் சென்றதால் ஆமைத்தீவுகள் என்ற பெயர் இன்றளவும் குறிப்பிடப்பட்டு வருகின்றன. இதில் இன்னும் ஆச்சரியமாக, பிலிப்பைன்ஸ் தீவுகளில் இர்ந்து சிங்கப்பூர் வரை பல இடங்களில் ஆமைகள் வசிக்கும் ஆமைத்தீவுகள் உள்ளது.
தென்கிழக்கு ஆசியா தீவுகளுக்குச் சீனர்கள் ஆசிய தென்கரை என்ற பெயரைத் தமிழ் பெயரிலே வைத்துள்ளனர். இதிலிருந்து, தமிழர்கள் தென் கிழக்கு ஆசிய பகுதிகளின் வழியாகக் கடல் நீரோட்டத்தில் வலசை பயணம் செய்யும் ஆமைகள் வழியாக முதலில் கட்டுமரம், தெப்பம், மிதவை போன்றவைகளில் ஒரு வழிப் பயணம் செய்து, பின்னர், பாய் மரங்களைப் பயன்படுத்தி இருவழி பயணத்தைத் துவக்கி துவக்கி வைத்த திரைமீளர்களாகக் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கும், அமெரிக்க பழங்குடியினருக்கும் இடையிலான பல நூறு ஒற்றுமைகளை விளக்கும் வகையில், அமெரிக்காவில் பல கடற்கரை மாநிலங்களில் கடந்த 60 வருடங்களாகப் பழங்குடியினர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 4ம் வெள்ளியன்று இக்கொண்டாடப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, கலிஃபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் தொல்லியல் கற்போம், பெண்கள் இணைய குழுமூலம் பழங்குடியினர் நாள் கொண்டாடுகிறார்கள் அமெரிக்காவின் பழங்குடிகளில் கலந்து இருக்கும் தமிழர்களின் மொழி, மரபு, பண்பாடு, கடலோடும் தன்மையை நினைவுப்படுத்தும் வகையிலே இந்நாள் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதி மக்களின் வாழ்வியலில் அமெரிக்கா என்பது பிழைப்புக்காகச் சென்ற இடம் என்ற மன நிலையும் கொண்டுள்ளனர். அமெரிக்காவில் வரலாறு, பண்பாடு இவற்றில் இன்றளவும் ஈடுபாடு கொள்ளாமல், தாம் சென்ற தாய்நாட்டையே நினைத்தவண்ணம் உள்ளார்கள்.
உலகம் முழுவதும் கடலில் சென்று திரைமீளர்களாகத் திரும்பி வந்த தமிழர்களுக்கு அமெரிக்க மண்ணில் ஊடுருவியுள்ள தமிழரின் வரலாற்றைத் தெளிவாகச் சொல்ல அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் பெண்களால் தொல்லியல் கற்போம் என்ற இணைய குழு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழுவில், வட அமெரிக்க தமிழ் பேரவை ஆண்டு விழாவிற்காகச் சென்ற கடல்சார் தமிழியல் தொன்மை ஆய்வாளர் ஒரிசா பாலு ஆய்வுகளால் ஈடுபட்ட அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பிரிமாண்ட் என்ற ஊரில் வசிக்கும் ஆசிரியை சத்தியா நடராஜன், தமிழ் ஆர்வலர்கள் கனகலட்சுமி, பிரியா, சவுந்திர நாயகி, சுகந்தி, ரேணுகா தேவி, செந்தாமரை, லஷ்மி மற்றும் பலரால் அந்நாட்டின் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பழங்குடி மையங்கள் போன்றவற்றில் இருக்கும் அமெரிக்க பழங்குடி வரலாற்றில் உள்ள தமிழரின் தொன்மையை தேடி வருகிறார்கள்.
உலக அளவில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் குழுமூலம், இந்தோ-பசுபிக் கடல் தொடர்பாகத் தமிழகத்திலிருந்து மலேசியா, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், பிலிஃபைன்ஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா, வியட்நாம், சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் ஆசியாவின் கடைக்கோடியில் உள்ள ரஷ்யாவின் காம்சட்கா போன்ற இடங்களிலிருந்து நீண்ட பசுபிக் பெருங்கடலை கடந்து அலாஸ்கா, கனடா மேற்கு வட அமெரிக்கா, மெக்சிக்கோ, கிருத்தமாலா, நிகாரிகோவா, பெரு, சிலி, அர்ஜெண்டினா வரை உள்ள கடற்கரைகளில் ஊடுருவி உள்ள தமிழர் பண்பாட்டை இடப்பெயர் மக்களின் பெயர், மரபு, பண்பாடு, நாட்டார் வழக்கியல், கடலோடும் தன்மை, இயற்கையின் மரங்கள், உயிரினங்கள், பெயர்களை ஒப்புமை செய்து, நீரோட்டங்களில் ஆமைகளின் வழித்தடத்தைப் பின் தொடர்ந்து, காற்றையும், கடல் நீரோட்டத்தையும் புரிந்துக்கொண்டு, புலம் பெயர்ந்த பழங்கற்கால மக்களின் கடலோடிய தன்மையை ஆய்வு செய்து வருகிறார்.
நான் தனி ஒருவராகப் பல வருடங்களாகச் செய்த ஆய்வை வயது கருதி குழுக்களை உருவாக்கிக் கொண்டு அந்தெந்த நாடுகளில் உள்ள மக்களின் மனதில் தமிழர்களின் புரிதலை ஏற்படுத்த முயன்று வருகிறேன். அதனுடன், அறிஞர் சாமன்லால், எழுத்தாளர்கள் கி.மனோகரன், சீனிவாசன், ராமநாதன் கடந்த 1940களில் இந்தியவியல் கட்டுரைகளில் தமிழர்களின் பண்பாடுகள் மெக்சிகோ நாட்டில் இருப்பதை அடையாளப்படுத்தியுள்ளது. முக்கியமாக, அமெரிக்காவில் உள்ள பல அருங்காட்சியகங்களில் தமிழர்களின் கலைப்பொருட்கள் பல ஆயிரக்கணக்கில் இருப்பதை, சிலை கடத்துபவர்கள் கொடுக்கும் வாக்குமூலம் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, தமிழகத்தின் வரலாற்றை மீட்பதற்கு பெரும் முயற்சியாக அமையும்.
அமெரிக்காவில் பழங்குடியினர் நாளை கொண்டாடி, தமிழருக்கும், அமெரிக்க பூர்வகுடிகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் வகையில், உலக அளவில் 183 நாடுகளில் தமிழர்களுக்கும், அந்நாட்டின் பூர்வகுடிகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் அந்நாட்டின் தமிழர்கள் ஒன்றிணைந்து பழங்குடியினர் நாள் கொண்டாட வேண்டும். இதன் மூலம், தமிழர்களின் கடல்சார் வரலாற்றை மீட்டு, தமிழர்களின் உண்மை வரலாற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார் தமிழர் வரலாற்று ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு.