Cricket

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக களமிறங்க தயாரான பென் ஸ்டோக்ஸ்.. இறுதியில் நியூசிலாந்து அணிக்கெதிராகவே உலகக்கோப்பை வென்றார் – வியக்கவைக்கும் தகவல்

இங்கிலாந்து அணிக்காக விளையாடிவரும் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்தவர். நியூசிலாந்தில் பிறந்திருந்தாலும் அவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்ததால் அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டோக்ஸ் விளையாடி வந்திருக்கிறார். அதன் பிறகு துர்ராம் அணிக்காக இவர் விளையாடி வந்த போது அவருடன் நியூசிலாந்து அணி லெஜன்ட் ராஸ் டெய்லர் விளையாடி உள்ளார். அந்த சமயம் பென் ஸ்டோக்ஸ் திறமையை பார்த்து அவரிடம் பேசிய போது நியூசிலாந்தில் பிறந்தவர் என தெரிந்தது.

உடனடியாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைச் செயல் அதிகாரியாக அப்போது இருந்த ஜஸ்டின் வாகனிடம் இதனை தெரிவித்திருக்கிறார் ராஸ் டெய்லர். இந்த சம்பவம் பற்றி தனது சுயசரிதை புத்தகத்திலும் ராஸ் டைலர் பதிவு செய்துள்ளார். அதில், ‘அப்போது பென்ஸ் ஸ்டோக்ஸ் 18-19 வயது இருப்பார். நியூசிலாந்து அணியின் மீது பேரார்வம் கொண்டிருந்தார். நியூசிலாந்து அணிக்கு விளையாடுவதற்கு விருப்பம் இருக்கிறதா? என்று அவரிடம் நான் கேட்டேன். நிச்சயம் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருந்தார்.

உடனடியாக அப்போது தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜஸ்டினிடம் நான் இதனை தெரிவித்தேன். இவரது திறமைகளை எடுத்துரைத்தேன். அதற்கு பதிலளித்த அவர், நிச்சயம் அழைத்து வாருங்கள். ஆனால் உள்ளூர் போட்டிகளில் சிறிது காலம் அவர் விளையாட வேண்டும். அதன் பிறகு தான் அவருக்கு உரிய வாய்ப்புகள் கொடுக்கப்படும் என தெளிவு படுத்தினார். என்னுடன் தான் அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவரது திறமைகளை நான் கவனித்தேன் மிக உயரிய இடத்திற்கு செல்வார் என்று நான் அவரிடம் அழுத்தமாக தெரிவித்தேன். இறுதியில் அது நடக்காமல் போனது. அதற்காக நான் பலமுறை வருத்தப்பட்டிருக்கிறேன்.’ என்று பதிவு செய்திருந்தார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரு அணிகளுக்கு இடையேயான உலககோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி நூலிழையில் தோல்வியை தழுவியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ் ஆவார். ராஸ் டெய்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இடையே நடந்த இந்த சம்பவம் 2010ஆம் ஆண்டு நிகழ்ந்ததாக ராஸ் டெய்லர் தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அப்போது பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணியில் விளையாடுவதற்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருந்தால், இங்கிலாந்து அணியால் உலகக் கோப்பையை வென்றிருக்க முடியுமா? என்ற சந்தேகம் தற்போது எழுகிறது.

இதற்கிடையில், பென் ஸ்டோக்ஸ் உள்ளூர் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டதால் 2011 ஆம் ஆண்டு முதன்மை இங்கிலாந்து அணிக்கு விளையாட அழைக்கப்பட்டிருக்கிறார். அதன் பிறகு தொடர்ந்து லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடி வந்த அவர், விரைவாக டெஸ்ட் போட்டிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அதிலும் தனது முக்கியமான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button