2024 T20 உலகக் கோப்பையில் ரோஹித்தும் கோலியும்; சவுரவ் கங்குலி!
ஒருனாள் தொடருக்குப் பிறகு ஓய்வில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 மற்றும் ஒருனாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
2023 ஒருனாள் உலக கோப்பை தொடர் முடிந்த நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு எடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடரிலிருந்து விலகிய ரோஹித் மற்றும் கோலி இருவரும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 மற்றும் ஒருனாள் தொடரில் இருந்தும் விலகியுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடருக்குச் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருனாள் தொடருக்குக் கே. எல். ராகுல் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் தொடருக்கு மட்டும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo3ODc1LCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA3ODc1IC0g4K6k4K+G4K6p4K+N4K6p4K6+4K6q4K+N4K6q4K6/4K6w4K6/4K6V4K+N4K6V4K6+IOCumuCvgeCuseCvjeCuseCvgeCuquCvjeCuquCur+Cuo+CupOCvjeCupOCuv+CuseCvjeCuleCuvuCuqSDgrqrgr4bgrrDgrr/grq8g4K6k4K+B4K6q4K+N4K6q4K6+4K6V4K+N4K6V4K6/IOCuh+CuqOCvjeCupOCuv+Cur+CuheCuo+CuvyEiLCJ1cmwiOiIiLCJpbWFnZV9pZCI6Nzg3NywiaW1hZ2VfdXJsIjoiaHR0cHM6Ly92aXJhbDQ4cG9zdC5jb20vd3AtY29udGVudC91cGxvYWRzLzIwMjMvMTIvQ3JpY2tldC0xLnBuZyIsInRpdGxlIjoi4K6k4K+G4K6p4K+N4K6p4K6+4K6q4K+N4K6q4K6/4K6w4K6/4K6V4K+N4K6V4K6+IOCumuCvgeCuseCvjeCuseCvgeCuquCvjeCuquCur+Cuo+CupOCvjeCupOCuv+CuseCvjeCuleCuvuCuqSDgrqrgr4bgrrDgrr/grq8g4K6k4K+B4K6q4K+N4K6q4K6+4K6V4K+N4K6V4K6/IOCuh+CuqOCvjeCupOCuv+Cur+CuheCuo+CuvyEiLCJzdW1tYXJ5IjoiIiwidGVtcGxhdGUiOiJzaW1wbGUifQ==”]
ரோஹித் மற்றும் கோலி இருவரும் தங்களது T20 எதிர்காலம்குறித்து சுயமாக முடிவெடுக்கலாம் என்று பிசிசிஐ சமீபத்தில் கூறிய நிலையில், ரோஹித் சர்மா T20 மற்றும் ODIs ஆகிய போட்டிகளிலிருந்து விலகியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹித் மற்றும் கோலி இருவரும் T20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ரோஹித் மற்றும் கோலி இருவரும் 2024 T20 உலகக் கோப்பைவரை விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
2024 T20 உலகக் கோப்பைவரை ரோஹித் கேப்டனாக நீடிப்பார்!
[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo3ODgyLCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA3ODgyIC0g4K6H4K6o4K+N4K6k4K6/4K6vIFQyMCDgroXgrqPgrr/grq/grr/grrLgr40g4K614K6/4K6w4K6+4K6f4K+NIOCuleCvi+CusuCuv+CuleCvjeCuleCvgSDgrofgrp/grq7grr/grrLgr43grrLgr4ghIiwidXJsIjoiIiwiaW1hZ2VfaWQiOjc4ODMsImltYWdlX3VybCI6Imh0dHBzOi8vdmlyYWw0OHBvc3QuY29tL3dwLWNvbnRlbnQvdXBsb2Fkcy8yMDIzLzEyL0NyaWNrZXQtNC5wbmciLCJ0aXRsZSI6IuCuh+CuqOCvjeCupOCuv+CuryBUMjAg4K6F4K6j4K6/4K6v4K6/4K6y4K+NIOCuteCuv+CusOCuvuCun+CvjSDgrpXgr4vgrrLgrr/grpXgr43grpXgr4Eg4K6H4K6f4K6u4K6/4K6y4K+N4K6y4K+IISIsInN1bW1hcnkiOiIiLCJ0ZW1wbGF0ZSI6InNpbXBsZSJ9″]
செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சவுரவ் கங்குலி, ரோஹித் மற்றும் கோலி இருவரின் T20 எதிர்காலம்குறித்து பேசினார். அந்த நேரத்தில், ரோஹித் மற்றும் கோலி இருவரும் இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான மற்றும் ஒருங்கிணைந்த பகுதிகள். உலக கோப்பை தொடரில் இருவரும் எப்படி ஆடினார்கள் என்பதை பார்த்தோம். ரோஹித் கேப்டனாகச் சிறப்பாகச் செயல்பட்டார். ஒரு பெரிய ஸ்டிரைக்க்கு பிறகு மீண்டும் விளையாடுவது கடினம். அவர்களின் இந்தப் பிரேக் தேவையான ஒன்று.
இருதரப்பு தொடருக்கும், உலகக் கோப்பை தொடருக்கும் உள்ள வித்தியாசம் அவர்களுக்குத் தெரியும். எனவே, ஒருனாள் உலகக் கோப்பைக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர்கள் T20 உலகக் கோப்பைக்கு மீண்டும் வருவார்கள். ரோஹித் திரும்பும்போது அனைத்து வடிவங்களுக்கும் கேப்டனாகச் செயல்பட வேண்டும். அவர் தலைவராக இருப்பதால், வரும் 2024 T20 உலகக் கோப்பைவரை அவர் கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று கங்குலி கூறினார்.