T20 கிரிக்கெட்டில் அதிவேக 4000 ரன்கள்; கே. எல். ராகுலை பின்னுக்கு தள்ளி கெய்க்வாட் சாதனை!

ருத்ரஜ் கெய்க்வாட் T20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 T20 போட்டிகளில் விளையாடி வரும் ருத்ராஜ் ஹைக்வாட், 4 T20 போட்டிகளிலும் 0, 58, 123, 32 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். 4-வது T20 போட்டியில் 32 ரன்கள் எடுத்து ருதுராஜ் கெய்க்வாட் T20 போட்டிகளில் இமாலய சாதனை படைத்துள்ளார்.

அதிவேகமாக 4000 T20 ரன்களை கடந்த வீரர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது T20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்சர் விளாசி சர்வதேச T20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதைத் தவிர, ருதுராஜ், 123 ரன்கள் குவித்தார், இதன்மூலம் சர்வதேச T20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ருதுராஜ், சர்வதேச T20 போட்டியில் சதம் அடித்த 9வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார், இதன் மூலம் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச T20 போட்டிகள், முதல் தர போட்டிகள், லிஸ்ட் ஏ போட்டிகள் என அனைத்து வகையான T20 போட்டிகளிலும் விளையாடிய ருதுராஜ், 117 இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை கடந்து, குறைந்த போட்டிகளில் இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் லோகேஷ் ராகுல் 116 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்திருந்தார்.

மேலும், சர்வதேச T20 போட்டிகளில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில், கிறிஸ் கெய்ல் (107 இன்னிங்ஸ்), ஷான் மார்ஸ் (113 இன்னிங்ஸ்), பாபர் அசாம் (115 இன்னிங்ஸ்) போன்ற 3 வீரர்களை அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் 4-வது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *