திலக் வர்மா கோல்டன் டக்; வெறுப்பேற்றிய இந்திய அணி நிர்வாகம்; ஸ்ரேயாஸ் ஐயர் எங்கே?

மும்பை : ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஆறு மாதங்கள் தான் எஞ்சி இருக்கிறது. அதற்குள் இந்தப் போட்டியைச் சேர்த்தால் இந்தியா வெறும் 4 சர்வதேச டி20 போட்டிகளில் தான் விளையாடுகிறது.

இதனால் யாரை அணியில் சேர்க்க வேண்டும்? எந்த இடத்திற்கு சரி வருவார் என்பது குறித்து இந்திய அணி திட்டத்தைத் தீட்ட வேண்டும். ஏற்கனவே விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் இந்திய வீரர்கள் அடுத்த கட்ட வீரர்களை வைத்துத் தான் அணியைத் தயாரிக்க வேண்டும்.

இந்த வகையில் ஸ்டார் வீரராக அறியப்படுபவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி இரண்டு போட்டிக்குத் துணை கேப்டன் ஆனார்.

மேலும் பெங்களூரில் நடைபெற்ற கடைசி போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணியைக் காப்பாற்றினார். மேலும் உலக கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி 500 ரன்கள் அடித்தார். இப்படி பல சாதனைகளைப் படைத்திருக்கும் ஸ்ரேயாஸ், ஏன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியில் இந்தியா சேர்க்கவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள திலக் வர்மா படுமோசமாக விளையாடி வருகிறார். திறமை வாய்ந்த வீரராகத் திலக் வருமா அறியப்பட்டாலும் அவர் கடந்த சில டி20 போட்டிகளாகப் பெரிய அளவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. புயல் போல் டி20 கிரிக்கெட்டில் அடி எடுத்து வைத்த திலக் வருமா தற்போது புஸ்வானமாக மாறிவிட்டார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய டி20 ஆட்டத்தில் கூடத் திலக் வர்மா முதல் பந்திலே கோல்டன் டக் ஆகி வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் திலக் வர்மாவுக்கு வழங்கிய வாய்ப்பை நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்காவது இந்திய அணி தங்களுடைய பிளேயிங் லெவனை கட்டமைத்து உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்ரேயாஸ் ஏன் நீக்கப்பட்டார் என்று இதுவரை இந்திய அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *