Cricket

IND vs SA 2nd ODI – ரிங்கு சிங் இன்று அறிமுகம்; ஏமாற்றிய ருதுராஜ்; சஞ்சு சாம்சனுக்கு புதிய பொறுப்பு!

இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி மும்பையில் போர்ட் எலிசபெத்தில் நடந்து வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஏற்கனவே 0-1 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஐபிஎல் மினி ஏலம் இன்று நடைபெறுவதால் அனைவரது பார்வையும் அதன் மீதே உள்ளது. இதனால் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுவதை ரசிகர்கள் பலரும் மறந்து விட்டனர்.

ஆனால் கிரிக்கெட் தொடர்பான அனைத்து செய்திகளையும் மைக்கில் தருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் ரிங்கு சிங், தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo4MzA1LCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA4MzA1IC0gQ1NLIOCuleCvgeCuseCuv+CuteCviOCuleCvjeCuleCvgeCuruCvjSDgrrXgr4fgrpXgrqrgr43grqrgrqjgr43grqTgr4Eg4K614K+A4K6a4K+N4K6a4K6+4K6z4K6w4K+NOyDgroXgrqTgrr/grpXgrrDgrr/grpXgr43grpXgr4Hgrq7gr40gMTAwIOCumuCupOCuteCvgOCupOCuruCvjSDgrqrgrrLgrq7gr40hIiwidXJsIjoiIiwiaW1hZ2VfaWQiOjgzMDYsImltYWdlX3VybCI6Imh0dHBzOi8vdmlyYWw0OHBvc3QuY29tL3dwLWNvbnRlbnQvdXBsb2Fkcy8yMDIzLzEyL0NyaWNrZXQtNjcucG5nIiwidGl0bGUiOiJDU0sg4K6V4K+B4K6x4K6/4K614K+I4K6V4K+N4K6V4K+B4K6u4K+NIOCuteCvh+CuleCuquCvjeCuquCuqOCvjeCupOCvgSDgrrXgr4Dgrprgr43grprgrr7grrPgrrDgr407IOCuheCupOCuv+CuleCusOCuv+CuleCvjeCuleCvgeCuruCvjSAxMDAg4K6a4K6k4K614K+A4K6k4K6u4K+NIOCuquCusuCuruCvjSEiLCJzdW1tYXJ5IjoiIiwidGVtcGxhdGUiOiJzaW1wbGUifQ==”]

இதன் மூலம் இந்தியாவின் பினிஷர் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் ரெய்னாவைப் போலவே ரிங்கு சிங்கும் இறுதிக்கட்டத்தில் களம் இறங்கி ஆக்ரோஷமாக விளையாடுவாரெனத் தெரிகிறது. ரிங்கு சிங் ஃபினிஷராகக் களமிறங்குவதால் சஞ்சு சாம்சனுக்கு இப்போது மிடில் ஆர்டரில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி இன்னிங்ஸை நிறுத்தும் வாய்ப்பு சஞ்சு சாம்சனுக்கு கிடைத்துள்ளது.

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo4MzEyLCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA4MzEyIC0g4K6Q4K6q4K6/4K6O4K6y4K+NIDIwMjQgOiAzIOCuteCvgOCusOCusOCvjeCuleCus+CvjSDgrq7grp/gr43grp/gr4Hgrq7gr4cg4K6H4K6y4K6V4K+N4K6V4K+BOyDgrq7gr4Hgrq7gr43grqrgr4gg4K6F4K6j4K6/4K6v4K6/4K6p4K+NIOCupOCuv+Cun+CvjeCun+CuruCvjSDgro7grqngr43grqkhIiwidXJsIjoiIiwiaW1hZ2VfaWQiOjgzMTMsImltYWdlX3VybCI6Imh0dHBzOi8vdmlyYWw0OHBvc3QuY29tL3dwLWNvbnRlbnQvdXBsb2Fkcy8yMDIzLzEyL0NyaWNrZXQtNzAucG5nIiwidGl0bGUiOiLgrpDgrqrgrr/gro7grrLgr40gMjAyNCA6IDMg4K614K+A4K6w4K6w4K+N4K6V4K6z4K+NIOCuruCun+CvjeCun+CvgeCuruCvhyDgrofgrrLgrpXgr43grpXgr4E7IOCuruCvgeCuruCvjeCuquCviCDgroXgrqPgrr/grq/grr/grqngr40g4K6k4K6/4K6f4K+N4K6f4K6u4K+NIOCujuCuqeCvjeCuqSEiLCJzdW1tYXJ5IjoiIiwidGVtcGxhdGUiOiJzaW1wbGUifQ==”]

இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ருதுராஜ் இன்றைய ஆட்டத்தில் வெறும் 4 ரன்களுக்கு அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். கில் இல்லாததால், ருதுராஜ் இடம் பிடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ருதுராஜ் ரசிகர்களுக்குத் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். இந்த ஆடுகளத்தில் இந்தியா 250-280 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button