சாதித்தது இந்திய இளம் வீரர்; வெறித்தனம் காட்டிய அர்ஷ்தீப் சிங்; வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருனாள் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருனாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருனாள் போட்டி பார்லில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 108 ரன்களும், திலக் வர்மா 52 ரன்களும், ரிங்கு சிங் 38 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து தென்னாப்பிரிக்க அணிக்காக ஹென்ரிக்ஸ்-டி சோர்சி கூட்டணி களமிறங்கியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில், ஹென்ரிக்ஸ் 19 ரன்களில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வான் டெர் டுசென், அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் மார்க்ரன்-சோர்சி கூட்டணி அமைத்து விரைவாக ரன்களை சேர்த்தது.
[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo4MzQ5LCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA4MzQ5IC0g4K6o4K6+4K6p4K+NIOCuh+CuqeCuvyDgroXgrqPgrr/grq/grr/grrLgr40g4K6H4K6w4K+B4K6q4K+N4K6q4K+H4K6p4K6+OiDgrprgr4vgrqTgrqngr4jgrq/gr4gg4K6a4K6+4K6k4K6p4K+IIOCuhuCuleCvjeCuleCvgeCuteCuvuCusOCuviDgrprgrp7gr43grprgr4Eg4K6a4K6+4K6u4K+N4K6a4K6p4K+NISIsInVybCI6IiIsImltYWdlX2lkIjo4MzUwLCJpbWFnZV91cmwiOiJodHRwczovL3ZpcmFsNDhwb3N0LmNvbS93cC1jb250ZW50L3VwbG9hZHMvMjAyMy8xMi9Dcmlja2V0LTItNS5wbmciLCJ0aXRsZSI6IuCuqOCuvuCuqeCvjSDgrofgrqngrr8g4K6F4K6j4K6/4K6v4K6/4K6y4K+NIOCuh+CusOCvgeCuquCvjeCuquCvh+CuqeCuvjog4K6a4K+L4K6k4K6p4K+I4K6v4K+IIOCumuCuvuCupOCuqeCviCDgrobgrpXgr43grpXgr4HgrrXgrr7grrDgrr4g4K6a4K6e4K+N4K6a4K+BIOCumuCuvuCuruCvjeCumuCuqeCvjSEiLCJzdW1tYXJ5IjoiIiwidGVtcGxhdGUiOiJzaW1wbGUifQ==”]
இவர்களைப் பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறிய நிலையில், தமிழக வீரர் வாஷிண்டன் சுந்தர் 36 ரன்களில் மார்க்ரனை வீழ்த்தினார். ஆனால் மறுமுனையில் நின்ற டி சோர்சி பவுண்டரிகள் அடிக்க ஆரம்பித்தார். இதனால் கே. எல். ராகுல் அர்ஷ்தீப் சிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆட்டத்தின் 30-வது ஓவரில் டிசோர்சி 81 ரன்களில் ஆட்டமிழந்தபோது ஆட்டத்தின் திருப்புமுனை ஏற்பட்டது.
கிளாசன், டேவில் மில்லர் இருவரும் களத்தில் அபாயகரமான வீரர்கள். ஆக்ரோஷமாக வந்த அவேஷ் கான் வீசிய லெக் கட்டரை முன்கூட்டியே கணிக்காமல் கிளாசன் அடித்த ஷாட் சற்று அதிகமாகச் சென்றதும் சாய் சுதர்சன் அபாரமாக டைவ் அடித்து இந்தியாவுக்கு சாதகமாக ஆட்டத்தைத் திருப்பினார். இதன் பின்னர் முல்டர் 1 ரன்னிலும், டேவில் மில்லர் 10 ரன்னிலும் வெளியேற, தென்னாப்பிரிக்க அணி 192 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo4MzU1LCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA4MzU1IC0g4K6F4K6k4K+BIOCukuCusOCvgSDgrobgrqPgr43grp/gr4Eg4K6u4K+B4K6p4K+N4K6q4K+BIOCuqOCun+CuqOCvjeCupOCupOCvgTsg4K6a4K6k4K6u4K+NIOCuheCun+Cuv+CupOCvjeCupCDgrqrgrr/grrHgrpXgr4Eg4K6J4K6j4K6w4K+N4K6a4K+N4K6a4K6/4K6V4K6w4K6u4K6+4K6VIOCuquCvh+CumuCuv+CuryDgrprgrp7gr43grprgr4Eg4K6a4K6+4K6u4K+N4K6a4K6p4K+NISIsInVybCI6IiIsImltYWdlX2lkIjo4MzU2LCJpbWFnZV91cmwiOiJodHRwczovL3ZpcmFsNDhwb3N0LmNvbS93cC1jb250ZW50L3VwbG9hZHMvMjAyMy8xMi9Dcmlja2V0LTMtNC5wbmciLCJ0aXRsZSI6IuCuheCupOCvgSDgrpLgrrDgr4Eg4K6G4K6j4K+N4K6f4K+BIOCuruCvgeCuqeCvjeCuquCvgSDgrqjgrp/grqjgr43grqTgrqTgr4E7IOCumuCupOCuruCvjSDgroXgrp/grr/grqTgr43grqQg4K6q4K6/4K6x4K6V4K+BIOCuieCuo+CusOCvjeCumuCvjeCumuCuv+CuleCusOCuruCuvuCulSDgrqrgr4fgrprgrr/grq8g4K6a4K6e4K+N4K6a4K+BIOCumuCuvuCuruCvjeCumuCuqeCvjSEiLCJzdW1tYXJ5IjoiIiwidGVtcGxhdGUiOiJzaW1wbGUifQ==”]
பின்னர் வந்த கேசவ் மகராஜ் 14 ரன்களிலும், லிசார்ட் வில்லியம்ஸ் 2 ரன்களிலும், புரென் ஹென்ரிக்ஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 45.5 ஓவர்களில் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், அவேஷ் கான், சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட ஒருனாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.