கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதையடுத்து, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வெளினாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா வேகமாக முன்னேறி வருகிறார். இதனால், மிகவும் கடினமான கேப்டவுன் ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்க பவுலர்கள் தடுமாறி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா. தற்போது கிரிக்கெட் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்களில், கேப்டவுனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பும்ரா மட்டுமே. அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளார்.
கேப்டவுனில் 25 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் பிளைத் முதலிடத்தில் உள்ளார். 1906 – 1910 காலகட்டத்தில் விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதன் பின்னர், ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே 1994 முதல் 2006 வரை கேப்டவுனில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதன் பின்னர் 2018-2024 காலகட்டத்தில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி வார்னேவின் சாதனையைப் பும்ரா முறியடித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர்களைத் தவிர 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பவுலர்கள் யாரும் தற்போது கிரிக்கெட் விளையாடவில்லை. அந்த வகையில் தென்னாப்பிரிக்காவின் கோட்டையான கேப்டவுனில் உலகின் நம்பர் 1 பவுலராகப் பும்ரா தனது கொடியைப் பறக்கவிட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடினமான ஆடுகளத்தில் அபாரமாகப் பந்து வீசித் தென்னாப்பிரிக்க அணியை முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கும் சுருட்டியது குறிப்பிடத்தக்கது.