தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி; இந்திய வீரர்களுடன் இணைந்த கிங்; 14 மாதங்களுக்குப் பிறகு மீண்டு!
இந்தூர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியுடன் நட்சத்திர வீரர் விராட் கோலி பயிற்சியைத் தொடங்கினார்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இந்தூரில் நாளை நடக்கிறது. மொஹாலியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ஷிவம் துபே அரைசதம் அடித்துக் கடைசி வரை நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.
இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்தூர் சென்றது. இந்திய அணி நேற்று காலை இந்தூர் மைதானம் வந்தடைந்த நிலையில், விராட் கோலி நேற்று இரவு மும்பையிலிருந்து இந்தூருக்கு பயணம் செய்தார். விராட் கோலி தனது மகளின் பிறந்தநாள் காரணமாக முதல் டி20 போட்டியில் பங்கேற்கவில்லை.
[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo4NTkxLCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA4NTkxIC0g4K654K6w4K+N4K6k4K6/4K6V4K+NIOCuquCuvuCuo+CvjeCun+Cuv+Cur+CuvuCuteCvgeCuleCvjeCuleCvgSDgrprgr4bgrpXgr43grq7gr4fgrp/gr407IOCumuCuv+CuteCuruCvjSDgrqTgr4Hgrqrgr4fgrrXgr4gg4K6k4K6p4K6/4K6v4K6+4K6VIOCuheCutOCviOCupOCvjeCupOCvgSDgrqrgr4fgrprgrr/grq8g4K6w4K+L4K654K6/4K6k4K+NIOCumuCusOCvjeCuruCuviEiLCJ1cmwiOiIiLCJpbWFnZV9pZCI6ODU5MiwiaW1hZ2VfdXJsIjoiaHR0cHM6Ly92aXJhbDQ4cG9zdC5jb20vd3AtY29udGVudC91cGxvYWRzLzIwMjQvMDEvQ3JpY2tldC0yNy5wbmciLCJ0aXRsZSI6IuCuueCusOCvjeCupOCuv+CuleCvjSDgrqrgrr7grqPgr43grp/grr/grq/grr7grrXgr4HgrpXgr43grpXgr4Eg4K6a4K+G4K6V4K+N4K6u4K+H4K6f4K+NOyDgrprgrr/grrXgrq7gr40g4K6k4K+B4K6q4K+H4K614K+IIOCupOCuqeCuv+Cur+CuvuCulSDgroXgrrTgr4jgrqTgr43grqTgr4Eg4K6q4K+H4K6a4K6/4K6vIOCusOCvi+CuueCuv+CupOCvjSDgrprgrrDgr43grq7grr4hIiwic3VtbWFyeSI6IiIsInRlbXBsYXRlIjoic2ltcGxlIn0=”]
இந்நிலையில் 2வது டி20 போட்டியில் விராட் கோலி பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இந்திய வீரர்கள் இந்தூரில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுடன் விராட் கோலி இணைந்துள்ளார். நட்சத்திர வீரர் விராட் கோலி 14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்குத் திரும்பியுள்ளார். விராட் கோலி கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடினார்.
இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் 5 மாதங்களுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி ஆர்வம் காட்டி வருவதாகத் தெரியவந்துள்ளது. தவிர விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க வாய்ப்புள்ளது.
[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo4NTk1LCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA4NTk1IC0g4K6V4K+HLuCujuCusuCvjS7grrDgrr7grpXgr4HgrrLgr40g4K6u4K+A4K6k4K+BIOCuh+CusuCvjeCusuCuvuCupCDgrqjgrq7gr43grqrgrr/grpXgr43grpXgr4g7IOCuh+Cus+CuruCvjSDgrrXgr4DgrrDgrrDgr4HgrpXgr43grpXgr4Eg4K6G4K6q4K+N4K6q4K+BIOCuqOCuv+CumuCvjeCumuCur+CuruCvjSEiLCJ1cmwiOiIiLCJpbWFnZV9pZCI6ODU5NywiaW1hZ2VfdXJsIjoiaHR0cHM6Ly92aXJhbDQ4cG9zdC5jb20vd3AtY29udGVudC91cGxvYWRzLzIwMjQvMDEvQ3JpY2tldC0yOS5wbmciLCJ0aXRsZSI6IuCuleCvhy7gro7grrLgr40u4K6w4K6+4K6V4K+B4K6y4K+NIOCuruCvgOCupOCvgSDgrofgrrLgr43grrLgrr7grqQg4K6o4K6u4K+N4K6q4K6/4K6V4K+N4K6V4K+IOyDgrofgrrPgrq7gr40g4K614K+A4K6w4K6w4K+B4K6V4K+N4K6V4K+BIOCuhuCuquCvjeCuquCvgSDgrqjgrr/grprgr43grprgrq/grq7gr40hIiwic3VtbWFyeSI6IiIsInRlbXBsYXRlIjoic2ltcGxlIn0=”]
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி ஏற்கனவே களமிறங்குகிறார். இவரும், ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணிக்குப் பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-ரோஹித் சர்மா முடிவு நாளைய ஆட்டத்தில் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.