இந்திய அணியிலிருந்து அஷ்வினை நீக்க; யுவராஜ் சிங் கொந்தளிப்பு!

மும்பை: மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் மோசமான பேட்டிங் மற்றும் பீல்டிங் காரணமாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் விமர்சித்துள்ளார்.

கடந்த டி20 உலகக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். ஒரு ஆஃப் ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமைகள் இந்திய அணிக்கு மகத்தான பலனை அளித்துள்ளது. ஆனால் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் மோசமான செயல்பாட்டிற்காக விமர்சிக்கப்பட்டார்.


அதேபோல இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர வீரராக விளையாடி வரும் அஷ்வினுக்கு வயது 37. இந்திய அணிக்காக இதுவரை 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின், 490 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், அவர் 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


இந்நிலையில் ரவிச்சந்திரன் அஷ்வின் குறித்து பேசிய முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின் சிறந்த பந்துவீச்சாளர். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியில் விளையாட அவர் தகுதியற்றவர். பந்துவீச்சில் சிறந்து விளங்கினாலும், பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அவர் என்ன செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ரவிச்சந்திரன் அஸ்வின் கண்டிப்பாக டெஸ்ட் அணியில் விளையாட வேண்டும். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து அஸ்வினை நீக்க வேண்டும் என்றார். சமீபத்தில், இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்குத் திரும்பினர்.


யுவராஜ் சிங் அவர்களின் மறுபிரவேசத்தை ஆதரித்த நிலையில், யுவராஜ் சிங் ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டும் விளையாடுவதை எதிர்த்துள்ளார். யுவராஜ் சிங்கின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *