எனது சிறந்த இன்னிங்ஸுக்கு ரோஹித் தான் காரணம்; இது எங்களின் சிறந்த இன்னிங்ஸ் – ஷிகர் தவான்!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இணைந்து பல நல்ல தொடக்கங்களை கொடுத்துள்ளனர். இந்த ஜோடி 2013 முதல் 22 வரை 50148 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்நிலையில் ஷிகர் தவான் அணியில் இடம் இழந்தார். அவருக்குப் பிறகு கில் சிறப்பாக விளையாடியிருந்தாலும், அனைத்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் ஷிகர் தவானுக்குப் பதிலாக இந்தியா இன்னும் ஒருவரைக் கண்டுபிடிக்கவில்லை.


ஷிகர் தவான் அளித்துள்ள பேட்டியில், ரோஹித் சர்மாவின் வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், நான் ரோஹித் சர்மாவுடன் விளையாடியபோது மறுமுனையிலிருந்து எனக்கு அதிக ஆதரவை அளித்துள்ளார். ரோகித் சர்மாவின் ஆதரவால் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளேன்.


பெரிய ஸ்கோரைத் துரத்துவது, பெரிய ஸ்கோரைப் பெறுவது என இரண்டிலும் நல்ல அடித்தளம் அமைத்தோம். அதற்கு ரோஹித் சர்மாவின் ஆதரவுதான் காரணம். ரோஹித் சர்மாவின் ஆதரவு இல்லாமல் என்னுடைய பல சிறந்த செயல்பாடுகள் நடந்திருக்காது. இதற்கான கிரெடிட்டை ரோஹித்துக்கே கொடுக்க வேண்டும். நானும் ரோஹித் சர்மாவும் பல இன்னிங்ஸ்களை ஒன்றாக விளையாடியுள்ளோம்.


குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டோம். இது எங்களின் சிறந்த ஆட்டமாக இருந்தது என்று நினைக்கிறேன். 2018 ஆசிய கோப்பையில் எனக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையேயான 210 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் இரண்டாவது சிறந்த ஆட்டம். அதுதான் சிறந்த இன்னிங்ஸ் என்று ஷிகர் தவான் கூறினார். தவான் தற்போது இந்திய அணியில் விளையாடாவிட்டாலும், வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாகச் செயல்பட்டு அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தர போராடுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *