‘ஐ.பி.எல்லில் இவருக்கு பந்து வீசுவது கூட மிகவும் கடினமாக இருந்தது. ஆசியக்கோப்பையில் இவர் அதிக ரன்களை விளாசுவார்’ – இந்திய வீரரை கைகாட்டிய ரஷீட் கான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் யார் அதிக ரன்களை அடிப்பார் என்ற கேள்விக்கு இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தான் அதிக ரன்களை அடிப்பார் என ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவரது யு-டியூப் சேனலில் கூறியுள்ளதாவது, சூர்ய குமார் யாதவ் ஒரு துணிச்சலான வீரர். அவர் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் அணிக்காகவும் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் தனது ஒட்டுமொத்த திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார். ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடிக்கும் வீரராக இருப்பார். அவர் மைதானத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். சூர்ய குமார் யாதவ் தான் ஆடும் அணிக்காக எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்.
ஐபிஎல்லில் அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமாக இருந்தது. அவர் இந்தியாவுக்காக களம் இறங்கும்போது அவருக்கு பந்துவீசுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.