Cricket

சிக்கலில் சிக்கினார் ரோஹித் சர்மா; 2 இடங்களுக்கு கேள்விக்குறி!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவது உறுதி செய்யப்பட்ட நிலையில், அக்சர் படேல், குல்தீப் யாதவ் இடையே யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. காயம் காரணமாகக் கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் விளையாடாததால், அவருக்குப் பதிலாகத் தேவ்தத் பட்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் முதல் டெஸ்டில் காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவும் முழு உடற்தகுதிக்கு திரும்பியுள்ளதால் அவரது இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo4ODYyLCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA4ODYyIC0gMTIg4K6q4K614K+B4K6j4K+N4K6f4K6w4K6/4K6V4K6z4K+NLCA4IOCumuCuv+CuleCvjeCuuOCusOCvjeCuleCus+CvjTsgNTUg4K6q4K6o4K+N4K6k4K+B4K6V4K6z4K6/4K6y4K+NIDEyMCDgrrDgrqngr43grpXgrrPgr407IOCusOCvi+CuueCuv+CupOCvjSDgrprgrr7grqTgrqngr4gg4K6a4K6u4K6p4K+NISIsInVybCI6IiIsImltYWdlX2lkIjo4ODYzLCJpbWFnZV91cmwiOiJodHRwczovL3ZpcmFsNDhwb3N0LmNvbS93cC1jb250ZW50L3VwbG9hZHMvMjAyNC8wMi9Dcmlja2V0LTk3LnBuZyIsInRpdGxlIjoiMTIg4K6q4K614K+B4K6j4K+N4K6f4K6w4K6/4K6V4K6z4K+NLCA4IOCumuCuv+CuleCvjeCuuOCusOCvjeCuleCus+CvjTsgNTUg4K6q4K6o4K+N4K6k4K+B4K6V4K6z4K6/4K6y4K+NIDEyMCDgrrDgrqngr43grpXgrrPgr407IOCusOCvi+CuueCuv+CupOCvjSDgrprgrr7grqTgrqngr4gg4K6a4K6u4K6p4K+NISIsInN1bW1hcnkiOiIiLCJ0ZW1wbGF0ZSI6InNpbXBsZSJ9″]


சொந்த மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளதால் இந்திய அணி வீரர்களுடன் ரவீந்திர ஜடேஜா தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஜடேஜா மீண்டும் களமிறங்கியுள்ளதால், இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அஸ்வின், ஜடேஜா இருவரும் உச்சகட்ட பார்மில் உள்ளனர்.

அதேபோல், ராஜ்கோட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இல்லை, விசாகப்பட்டினம் ஆடுகளம் போல் உள்ளது. 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது இந்திய அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்யும் நிலைக்குக் கேப்டன் ரோகித் சர்மா தள்ளப்பட்டுள்ளார்.

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo4ODY5LCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA4ODY5IC0gMTkg4K614K6v4K6k4K+B4K6V4K+N4K6V4K+B4K6f4K+N4K6q4K6f4K+N4K6f4K+L4K6w4K+B4K6V4K+N4K6V4K6+4K6pIOCuieCusuCuleCuleCvjSDgrpXgr4vgrqrgr43grqrgr4gg4K6H4K6x4K+B4K6k4K6/4K6q4K+NIOCuquCvi+Cun+CvjeCun+CuvyEiLCJ1cmwiOiIiLCJpbWFnZV9pZCI6ODg3MCwiaW1hZ2VfdXJsIjoiaHR0cHM6Ly92aXJhbDQ4cG9zdC5jb20vd3AtY29udGVudC91cGxvYWRzLzIwMjQvMDIvQ3JpY2tldC05OS5wbmciLCJ0aXRsZSI6IjE5IOCuteCur+CupOCvgeCuleCvjeCuleCvgeCun+CvjeCuquCun+CvjeCun+Cvi+CusOCvgeCuleCvjeCuleCuvuCuqSDgrongrrLgrpXgrpXgr40g4K6V4K+L4K6q4K+N4K6q4K+IIOCuh+CuseCvgeCupOCuv+CuquCvjSDgrqrgr4vgrp/gr43grp/grr8hIiwic3VtbWFyeSI6IiIsInRlbXBsYXRlIjoic2ltcGxlIn0=”]


குல்தீப் யாதவ் இங்கிலாந்தின் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை அட்டவணைக்கு வெளியே வைத்திருப்பதில் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக மாறினார். ஏனெனில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் மற்றும் லைன் மற்றும் லென்த் வித்தியாசம் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. அதுமட்டுமின்றி கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiaW50ZXJuYWwiLCJwb3N0Ijo4ODc2LCJwb3N0X2xhYmVsIjoiUG9zdCA4ODc2IC0g4K614K6/4K6w4K6+4K6f4K+NIOCuleCvi+CusuCuvyDgrofgrrLgr43grrLgr4jgrq/grr47IOCuquCvh+Cun+CvjeCun+Cuv+CumeCvjSDgrqrgrq/grr/grrHgr43grprgrr/grq/gr4jgrqTgr40g4K6k4K+K4K6f4K6Z4K+N4K6V4K6/4K6vIOCuleCvgeCun+CvjeCun+CuvyDgrpXgr4vgrrngr43grrLgrr8hIiwidXJsIjoiIiwiaW1hZ2VfaWQiOjg4NzcsImltYWdlX3VybCI6Imh0dHBzOi8vdmlyYWw0OHBvc3QuY29tL3dwLWNvbnRlbnQvdXBsb2Fkcy8yMDI0LzAyL0NyaWNrZXQtMTAxLnBuZyIsInRpdGxlIjoi4K614K6/4K6w4K6+4K6f4K+NIOCuleCvi+CusuCuvyDgrofgrrLgr43grrLgr4jgrq/grr47IOCuquCvh+Cun+CvjeCun+Cuv+CumeCvjSDgrqrgrq/grr/grrHgr43grprgrr/grq/gr4jgrqTgr40g4K6k4K+K4K6f4K6Z4K+N4K6V4K6/4K6vIOCuleCvgeCun+CvjeCun+CuvyDgrpXgr4vgrrngr43grrLgrr8hIiwic3VtbWFyeSI6IiIsInRlbXBsYXRlIjoic2ltcGxlIn0=”]


அதேபோல், அக்சர் படேலுக்கு, 2023ல் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் 8 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். ஸ்கொயர் டர்னர் ஆடுகளத்தில், அக்சர் படேல் விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் குல்தீப் யாதவ் ராஜ்கோட் ஆடுகளத்தில் விளையாடிய அனுபவத்தை வைத்துக் கேப்டன் ரோகித் சர்மா அணியை யார் முடிவு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button