சிராஜ் வெளிப்படைப் பேச்சு; இல்லை அஷ்வின்; நம்ம திட்டம் அது மட்டும்தான்!

ராஜ்கோட்: இந்திய அணியில் அஷ்வின் இல்லாததால், 4 பவுலர்களின் பொறுப்பும் அதிகரித்துள்ளது என நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்துள்ளது. இந்நிலையில், நட்சத்திர வீரர் அஷ்வின் தனது தாயின் உடல்நிலை காரணமாக 3வது டெஸ்டிலிருந்து விலகினார்.


இந்நிலையில் 3வது டெஸ்டின் 3வது நாள் ஆட்டத்தை 4 பவுலர்களுடன் இந்திய அணி தொடங்கியது. இந்தியாவின் மிரட்டலான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி கடைசி 8 விக்கெட்டுகளை வெறும் 95 ரன்களுக்கு இழந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 319 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இதற்குச் சிராஜின் 4 விக்கெட்டுகளே முக்கிய காரணம்.

இதையடுத்து இந்திய அணி 3வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4வது நாளில் 2 செஷன்கள் விளையாடினால் 500 ரன்களுக்கு மேல் இலக்கை எளிதாக நிர்ணயித்து விடலாம். இதில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய வீரர் முகமது சிராஜ் அளித்த பேட்டியில், நாங்கள் 4 பந்து வீச்சாளர்கள் மட்டுமே. அதனால் நமது பொறுப்பு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

இங்கிலாந்து வீரர்கள் தாக்குவார்கள் என எதிர்பார்த்தோம். அதனால் எங்களிடம் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. அவர்கள் தவறு செய்வார்கள் என்று நாங்கள் காத்திருந்தோம். விக்கெட்டுகளைப் பெற யார்க்கர்கள் எப்போதும் சிறந்த வழியாகும். நான் அதை நன்றாகச் செயல்படுத்தினேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு பந்துவீச்சாளராக, நான் 6 டாட் பால்களை வீச வேண்டும். ஏனென்றால் 6 டாட் பால்களை தொடர்ச்சியாக விளையாடும் பழக்கம் அவர்களுக்கு இல்லை.

அதன்படி செயல்பட்டோம். 2வது டெஸ்டில் எனக்கு ஓய்வு கிடைத்தபோது எனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடிந்தது. அதன் பிறகு பயிற்சியைத் தொடங்கினேன். பும்ராவின் சாகசங்களை டிவியில் பார்த்து ரசித்ததாகவும், ஆர்சிபி அணி முகாமில் சந்திக்கலாம் என்று தினேஷ் கார்த்திக்கிடம் கூறியதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *