6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்… மொத்தம் 24 பந்துகளில் 72 ரன்கள். காட்டடி அடித்த ஆண்ட்ரே ரஸல் – வீடியோ உள்ளே

மேற்கிந்தியத் தீவுகள், கரீபியன் பிரிமியர் லீக் நிர்வாகங்கள் இணைந்து 6சிக்ஸ்டி என்னும் 10 ஓவர் கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 விக்கெட் வரை களமிறக்கலாம். 6 விக்கெட்கள் முடிந்த பிறகு, ஆல்-அவுட் என அறிவிக்கப்படும். ஒவ்வொரு அணிக்கும் இரண்டு ஓவர்கள் பவர் பிளே உண்டு. முதல் 12 பந்துகளில் 2 சிக்ஸர்களை அடித்தால் மட்டுமே, மூன்றாவது பவர் பிளே கிடைக்கும். அந்த பவர் பிளேவை 3 முதல் 9 ஓவர்களுகுள் எடுத்துக்கொள்ளலாம்.
Andre Russell SIX SIXES off consecutive SIX balls in the SIXTY tournament.
8 SIXES and 5 FOURS.@TKRiders pic.twitter.com/jBKyzqwPOj
— 𝗔𝗱𝗶𝘁𝘆𝗔 (@StarkAditya_) August 28, 2022
முதல் 5 ஓவர்களை, ஒரே என்டில் இருந்துதான் பந்துவீச வேண்டும். அடுத்த 5 ஓவருக்கு எதிர் பெவிலியன் என்டில் இருந்து பந்துவீச வேண்டும். இப்படி புது விதிமுறைகள் அதிகம் இருப்பதால் இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், மேற்கிந்தியத் தீவுகளில் இந்த தொடர் நடைபெறும் என்பதால் காட்டடிக்கு பஞ்சமிருக்காது எனவும் கருதப்பட்டது. இறுதியில் அதேபோல்தான் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் செய்ண்ட் கிட்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய நிவைஸ் பேட்ரியாட்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸல் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டார். டோமினிக் ட்ரேக்ஸ் வீசிய 7ஆவது ஓவரின் 3,4,5,6 ஆகிய பந்துகளில் சிக்ஸர்களை அடித்த இவர் தொடர்ந்து 8ஆவது ஓவரின் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை அடித்து, மொத்தம் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
17 பந்துகளில் அரை சதம் அடித்த இவர், இறுதியில் 24 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரி உட்பட 72 ரன்களை குவித்து அசத்தினார்.
Andre Russell SIX SIXES off consecutive SIX balls in the SIXTY tournament.
8 SIXES and 5 FOURS.@TKRiders pic.twitter.com/jBKyzqwPOj
— 𝗔𝗱𝗶𝘁𝘆𝗔 (@StarkAditya_) August 28, 2022