Cricket

காயமடைந்த வீரர்; களத்தில் தோனி; சிஎஸ்கே அணியில் சர்பராஸ் கான்..!

இந்திய கிரிக்கெட்டில் சமீப காலங்களில் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் அறிமுக போட்டியிலேயே இவ்வளவு வரவேற்பும் ஆதரவும் கிடைத்ததில்லை. ஆறு வருட போராட்டத்திற்கு பிறகு சர்பராஸ் கான் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் தொடங்கி, ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகமான சர்பராஸ் கான், 2015-ல் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மொத்தம் 585 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 67 ரன்கள். சராசரி 22.50. அவர் ஸ்டிரைக் ரேட் 130. ஐபிஎல் போட்டிகளில் சர்பராஸ் கானும் தவறவிட்டார். ஒன்பது வருடங்களாகப் பெரிய ஸ்ரேக் இல்லாமல் தவித்து வருகிறார்.


இந்நிலையில் ஐபிஎல் 17வது சீசனுக்கான மினி ஏலத்தில் கூடச் சர்பராஸ் கானை வாங்க எந்த அணி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சர்பராஸ் கான் தனது திறமையை நிரூபித்தார். இதனால் தற்போது ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தப்பு செய்து விட்டோமா என்று புலம்பி வருகின்றனர். இதனால் சர்பராஸ்கானை எப்படியாவது தங்கள் அணிக்குள் இழுக்க வேண்டும் என்று ஒவ்வொரு அணியும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் ஏலம் முடிந்து காயம் ஏற்பட்டால் மட்டுமே வீரர்களை மாற்ற முடியும். சிஎஸ்கே அணியில் சிவம் துபே காயம் அடைந்துள்ளார். இதனால், காயத்தின் தன்மையை ஆராய்ந்த பிறகே அவர் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதனால் சர்பராஸ் காந்தாவை மாற்று வீரராகச் சேர்க்க சிஎஸ்கே அணி தயாராகி வருகிறது. சர்பராஸ் கான் சுழற்பந்து வீச்சுடன் அபாரமாகப் பந்துவீசுவதால் அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் கருதுகிறது. அதேபோல் கொல்கத்தா அணியில் புதிய பேட்டிங் இல்லாததால் எப்படியாவது சர்பராஸ் கானை அழைத்து வர வேண்டும் என்று அணி நிர்வாகத்துக்குக் கம்பீர் அறிவுறுத்தினார். மினி ஏலத்தில் எதிர்பாராத விதமாக, ஒரு டெஸ்ட் போட்டி சர்ப்ராஸ் கானின் முழு வாழ்க்கையையும் மாற்றியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button