Cricket

இந்தியாவிடம் தோற்றாலும் கையில் கறுப்பு பட்டியுடன் களமிறங்கி ரசிகர்கள் மனதை வென்ற பாகிஸ்தான்

15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இறுதி ஓவரில் ஹார்டிக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர். பாகிஸ்தானில் பெய்த கடும் மழையால் அந்நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் பெய்த கடும் மழையால் 3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். 900க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 4 லட்சம் வீடுகள் பாழடைந்தன. சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். எனவே அவர்களுக்கு துணை நிற்பதை தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button