Cricket

‘அதே போட்டி, அதே எதிரணி, அதே ஓய்வறை. இன்று சாதித்ததைப் போல உணர்கிறேன். இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் என் வாழ்க்கை காலி’ – மனம் உருகிய ஹார்டிக்

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது டுபாயில் நடைபெற்றுவரும் நிலையில் 2018 ஆசியக் கோப்பைப் போட்டியில் நடைபெற்ற சம்பவத்தை மறக்கவில்லை என ஆல்ரவுண்டர் பாண்டியா பேட்டியளித்துள்ளார். இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டம் முடிந்த பிறகு பிசிசிஐக்காக பாண்டியாவைப் பேட்டி கண்டார் ஜடேஜா. அப்போது பாண்டியா கூறியதாவது,

2018 ஆசியக் கோப்பைப் போட்டி சம்பவத்தை நான் மறக்கவில்லை. இந்த மைதானத்தில் ஸ்டெரச்சரில் என்னைக் கொண்டு சென்றார்கள். அதே போட்டி, அதே எதிரணி, அதே ஓய்வறை. இன்று சாதித்ததைப் போல உணர்கிறேன். ஏனெனில் மீண்டு வருவதற்கு நான் என்ன செய்தேன், எப்படி வாய்ப்பு பெற்றேன் என்பது அழகான பயணம். நான் முழு உடற்தகுதியை அடைய பலர் உழைத்துள்ளார்கள். அவர்களுக்குப் போதிய கவனம் கிடைக்காது. நிதின் படேல், சோம் தேசாய் ஆகிய இருவரால் தான் நான் மீண்டு வந்து இதுபோல விளையாடுகிறேன்.

கடைசி ஓவரில் ஏழு ரன்கள் அடிப்பது பெரிய கஷ்டமல்ல. நவாஸ், இடக்கை சுழற்பந்து வீச்சாளர், வட்டத்துக்குள் ஐந்து ஃபீல்டர்கள் இருந்தார்கள். வட்டத்துக்கு வெளியே 10 ஃபீல்டர்கள் இருந்திருந்தாலும் வித்தியாசம் இருந்திருக்காது. ஏனெனில் நான் எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்தை அடிக்க வேண்டும் என்றார்.

2018-ல் துபையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 18-வது ஓவர் முடிவில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கடைசிப் பந்தை வீசியபோது கீழே விழுந்தார். இதில் இடுப்பில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்துக்கு ஸ்டெரச்சர் கொண்டு வரப்பட்டு பாண்டியா அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து பாண்டியா விலகினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button