என்ன மன்னிச்சிருங்க நான் போறன் !!! டி20 சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கவுள்ள கோஹ்லி. எப்போது தெரியுமா ? – வெளியான தகவல்
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு பின், இந்தியாவின் கோஹ்லி சர்வதேச டி20 போட்டியில் இருந்து விடை பெறுவாரா என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி 33. சமீபத்தில் டுபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டி, இவர் பங்கேற்ற 100வது சர்வதேச டி20 போட்டியானது. தவிர, மூன்று வித கிரிக்கெட்டிலும், 100 போட்டி அல்லது அதற்கு மேல் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இதுவரை 102 டெஸ்ட் (8074 ரன்), 262 ஒருநாள் (12344 ரன்), 100 சர்வதேச டி20 (3343 ரன்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
கிரிக்கெட் அரங்கில் நிறைய சாதனை படைத்த போதும், கோஹ்லியின் சமீபத்திய செயல்பாடு கவலை அளிக்கிறது. கடந்த 2019ல் கோல்கட்டாவில் நடந்த பங்களாதேஷூக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் சதம் (136 ரன்) விளாசிய இவர், அதன்பின் பங்கேற்ற 69 சர்வதேச போட்டிகளில் (18 டெஸ்ட், 23 ஒருநாள், 28 சர்வதேச டி20 ஒருமுறை கூட சதம் அடிக்கவில்லை. அவுஸ்திரேலியாவில், வரும் அக். 16 முதல் நவ. 13 வரை டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு கோஹ்லி விளையாடிய 5 டி20 சர்வதேச போட்டியில் 116 ரன் (17, 52, 1, 11, 35) மட்டும் எடுத்துள்ளார். இதில் 17 ரன் எடுப்பதற்கு 13 பந்து தேவைப்பட்டது. இதேபோல 52 ரன்னை 41 பந்திலும், 35 ரன்னை 34 பந்திலும் எடுத்தார். இவரது ஸ்டிரைக் ரேட் 150க்கும் குறைவாக உள்ளது. பார்ம் இல்லாமல் தவிக்கும் கோஹ்லி, டி20; உலக கோப்பைக்கு அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம். அதன்பின், இவரது நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஒருநாள், டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்தலாம். ஏனெனில் இந்திய ஆண்கள் அணி அடுத்த 5 ஆண்டில், 38 டெஸ்ட், 42 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.