வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்களை நிறுத்தியாக வேண்டும். இந்திய அணியுடனான போட்டியில் இறுதி நேரத்தில் பாகிஸ்தான் அணிக்கு ஐ.சி.சியின் புது ரூல்ஸ்
இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் கடைசி ஓவர்களில் வட்டத்துக்குள் ஐந்து வீரர்கள் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவாகளில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோத்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவாகளில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது. இந்த ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியா – பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் கடைசி 3 ஓவர்களில் வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்களை வைத்து விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காரணம்? 85 நிமிடங்களுக்கு மேல் வீசப்படும் ஓவர்களின் போது வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்கள் இருந்தாக வேண்டும் என்கிற விதிமுறை ஜனவரி 2022 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஐசிசி விதிமுறைகளின்படி 20 ஓவர்களையும் 85 நிமிடங்களுக்குள் முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்களை நிறுத்தியாக வேண்டும். இதனால் பந்துவீசும் அணிக்குப் பின்னடைவு ஏற்படும். வட்டத்துக்கு வெளியே கூடுதல் வீரர்கள் இருந்தால் தானே ரன்களைத் தடுக்க முடியும், விக்கெட்டுகளை எடுக்க முடியும்.