‘நான் மரணித்துவிட்டேன் என்ற செய்தி பரவியது. நான் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை’ – அதிர்ச்சி கதையை வெளியிட்ட ஜடேஜா

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய – ஹாங்காங் அணிகளுக்கிடையிலான போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜடேஜாவிடம், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையை இழக்கக்கூடும் என்று செய்திகள் பரவிவருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, ‘உலகக் கோப்பை அணியில் நான் இல்லை என்று இது மிகச் சிறிய வதந்தி. ஒருமுறை என் மரணம் குறித்த வதந்தி பரவியது. அப்படிப்பட்ட வதந்திகளை உங்களால் பொருத்த கொள்ள முடியாது. நான் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதிலேயே இப்போது எனது கவனம்’ என்று தெரிவித்தார்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில், ஜடேஜா 118.37 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 19.33 சராசரியுடன் 116 ரன்களே எடுத்திருந்தார். அவரால் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது. மேலும், விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சில மாதங்கள் போட்டிகளை தவறவிட்டார். காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் விளையாட மாட்டார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், விரைவாகவே குணமடைந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்றத்துடன் எட்ஜ்பாஸ்டன் மைதான டெஸ்டில் சதம் அடித்து தன்னை நிரூபித்தார். நேற்றுமுன்தினம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஹர்திக் பாண்டியாவுடன் 52 ரன் பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.