உண்மையான ரசிகன் என்ற வகையில் தலை வணங்குகிறோம்.. இலங்கை ரசிகர்கள் பங்களாதேஷ் அணியை கேவலமாக பேசிவரும் நிலையில், தோல்வியின் வலியிலும் இலங்கை அணியை பாராட்டிய பங். கேப்டன் ஷகீப்

இலங்கை அணியுடனான தோல்வியின் பின்னர் பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகீப் அல் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வங்கதேசம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

‘எங்கள் கடந்த ஆறு மாதங்களை நீங்கள் பார்த்தால், நாங்கள் போட்டித்தன்மையுடன் இருக்கவில்லை, உலகக் கோப்பை ஒரு வித்தியாசமான சவாலாக இருக்கும், நாங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் நாங்கள் பல பகுதிகளில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.’ டெத் ஓவர்களில் வங்கதேசத்தின் பந்துவீச்சு குறித்த கவலைகளையும் ஷகிப் எடுத்துரைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
‘டெத் ஓவர் பந்துவீச்சை நாங்கள் மேம்படுத்த விரும்புகிறோம், அந்த பகுதியை நாங்கள் தவறவிட்டோம், எங்களுக்கான ஆட்டத்தை இழக்கிறோம். உலக கோப்பைக்கு முன்னர் நாங்கள் அவற்றை சீர்படுத்த வேண்டுமென தெரிவித்த ஷகிப், இலங்கை அணியையும் பாராட்டினார்.