உண்மையிலேயே உலக தரம்வாய்ந்த பவுலர்கள் பங்களாதேஷ் அணியில் உள்ளனர் என்பதை இலங்கை மல்லுக்கட்டி வின் பண்ணும் போதே நிரூபித்துவிட்டனர்.. பங்களாதேஷ் வெளியேறினாலும் ரசிகர்களை ஈர்த்த அணி முகாமையாளரின் கருத்து

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான நாக்அவுட் சுற்றுப்போட்டியில் பங்களாதேஷ் அணியை இறுதி ஓவரில் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை அணி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இந்த போட்டி ஆரம்பிக்க முன்னர் இலங்கை அணியில் உலக தரம்வாய்ந்த பவுலர்கள் இல்லையெனவும், பங்களாதேஷ் அணியில் பல உலக தரம்வாய்ந்த பவுலர்கள் காணப்படுகின்றனர் எனவும் பங்களாதேஷ் அணியின் முகாமையாளர் காலித் மஹ்மூத் தெரிவித்திருந்தார்.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதன்பின் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நீண்ட நேரம் தாக்குபிடித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் மற்றும் தசுன் ஷனாகா ஆகியோரின் பொறுப்பான விளையாட்டின் மூலம் கடைசி இரண்டு ஓவரில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு இலங்கை அணி வந்தது.
வெற்றிக்காக போராடிய இலங்கை வீரர்களின் வேலையை இலகுவாக்கும் வகையில், வங்கதேச பந்துவீச்சாளர்கள் முக்கியமான கடைசி நேரத்தில் கூட பொறுப்பில்லாமல் பந்துவீசி நோ – பால், வொய்ட் என வீசியதால் 19.2 ஓவரில் இலக்கை எட்டிய இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.