இவர்கள் இருவரையும் நம்பித்தான் ராஜஸ்தான் ரோயல்ஸ் வண்டி ஓடப்போகிறது. நம்பிக்கையுடன் கூறிய சங்கக்கார ! அந்த இருவரும் யார் தெரியுமா ?

விளையாட்டு

14ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது கடந்த 9ஆம் திகதியிலிருந்து இந்தியாவில் நடைபெற்று வருகிறது. போட்டி ஆரம்பமாகி ஐந்து போட்டிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் ஒவ்வொரு போட்டியும் மிகவும் விறுவிறுப்புத் தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது. இதில் நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதி ஓவரில் 4 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இந்த போட்டியின் பின்னர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இயக்குனராக இலங்கையை சேர்ந்த குமார் சங்ககார பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கும் போது இந்த விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். அவர் தெரிவிக்கையில், ‘நெருக்கடியான நிலைமை எப்பொழுதுமே இருக்கும். ஆனால் அதை மறக்க முயற்சி செய்யவேண்டும். சஞ்சு சாம்சன் மற்றும் மற்ற அனைத்து வீரர்களிடம் நீங்கள் இதனை காண்பீர்கள். 

மேலும் அதுபோன்ற இக்கட்டான நிலைகளை சமாளிப்பதற்கு தனி யுக்தி உள்ளது என்று தெரிவித்தார். சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் டிவாடியா பற்றி கூறியதாவது இவர்கள் இருவரும் மிக சிறந்த வீரர்கள். சர்வதேச போட்டிகளில் இவர்கள் மிக சிறப்பாக செயல்படுவார்கள். இவர்களுக்கு கிரிக்கெட் அறிவு அதிகம் உள்ளது, 

மேலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று இவர்களுக்கு நன்கு தெரியும். மேலும் இந்திய அணியில் இளம் பேட்டிங் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் சஞ்சு சாம்சன் தனது லட்சியத்தை போட்டியில் மிக சிறப்பாக செய்யக்கூடியதில் வல்லவர். ராகுல் டிவாடிய மற்றும் சஞ்சு சாம்சன் இருவரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் நம்புகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *