ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை மைல்கல்லை எட்டிய தமிழன் தினேஷ் கார்த்திக்.. இது ஒட்டுமொத்த தமிழனுக்கும் கிடைத்த பெருதை

விளையாட்டு

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14வது பருவ காலத்திற்கான தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான தொடரானது தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் ஐந்தாவது லீக் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியின் போது கிரண் பொல்லார்ட்டின் கெட்ச்சை பிடித்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 150 ஆட்டமிழப்புகளை நிகழ்த்திய இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *