14 வருட ஐ.பி.எல் வரலாற்றில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரராக சாதனை படைத்த அண்ட்ரூ ரசல்

விளையாட்டு

கிரிக்கெட் உலகின் திருவிழா என வர்ணிக்கப்படுகின்ற 2021ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரானது கடந்த 9ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரையில் 5 போட்டிகள் நிறைவு பெற்றிருக்கிறது. தொடரின் 5வது லீக் போட்டியில் நேற்றைய தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இலகுவான வெற்றியை பதிவு செய்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அணித்தலைவர் ரோகித் சர்மா 43 ஓட்டங்களை பெற்றார்.

பின்னர் சூரியகுமார் யாதவ் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஏனைய வீரர்கள் பெரிதாக பிரகாசிக்கவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சில் சகலதுறை வீரரான மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த அண்ட்ரூ ரசல் 2 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இவர் இவ்வாறு இரண்டு ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *