‘யப்பா.. ஏன்னா டைவ்டா சாமி..’ இந்த சீசனோட பெஸ்ட் சம்பவம் இதான்..’ பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம்’ வீரர் பிடித்த மிரட்டலான கேட்ச்.. வீடியோ உள்ளே

விளையாட்டு

2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

அணியின் துடுப்பாட்டத்தில் மயங்க் அகர்வால் 31 ஓட்டத்தையும், கிறிஸ் ஜோர்டன் அதிரடியாக 18 பந்துகளில் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஏனைய வீரர்கள் குறைந்தளவிலான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 124 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால் அணித்தலைவர் இயன் மோர்கன் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோருக்கிடையில் மிக சிறப்பான இணைப்பாட்டம் பகிரப்பட்டது. தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் 176 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் தெரிவானார்.

இந்த போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி கொண்டிருக்கின்ற வேளையில் போட்டியின் 3-வது ஓவரில் இறுதி பந்தை பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அஸ்தீப் சிங் வீசினார். அந்தப் பந்துக்கு சிக்சர் அ டிக்க முயன்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான சுனில் நரேன் டீப் மிட் விக்கெட் திசையில் ஓங்கி அ டித்தார்.

முதலில் பந்து சிக்ஸருக்கு போனது போல தோன்றிய நிலையில், பந்து அதிகம் உயர்ந்ததால், மைதானத்திற்குள்ளேயே இருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த பந்தை நோக்கி ஓடி வந்த ரவி பிஷ்னாய், டைவ் அடித்து மிக அற்புதமாக கேட்ச் செய்து அசத்தினார்.

யாரும் எதிர்பாராத வகையில், மிக அசத்தலான கேட்ச் ஒன்றை பிஷ்னாய் பிடித்த நிலையில், இந்த சீசனின் சிறந்த கேட்ச் இது தான் என்று ரசிகர்கள் இளம் வீரருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். குறித்த வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *