‘எங்களுக்கு ஏலா’ பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய மே.இ தீவுகளின் முக்கிய 10 வீரர்கள்.. காரணம் வெளியானது !!!

விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐ.சி.சி உலகக்கிண்ண சுப்பர் லீக் தொடரின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரிலும், ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. குறித்த தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் குழாம்கள் அந்நாட்டு கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளன. கொ ரோ னா வை ர ஸ் தா க் க ம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய பல வீரர்கள் பங்களாதேஷ்  சுற்றுப்பயணத்தை தவிர்த்திருக்கும் நிலையில், இளம் வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தின் படி, மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிரேக் பிரத்வெயிட் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் சர்வதேச தொடருக்கான அணியின் தலைவராக மேற்கிந்திய தீவுகள் ஏ அணியின் தலைவர் ஜெசன் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வழமையான அணித்தலைவரான ஜேசன்  ஹோல்டர், கிரண் பொல்லார்ட், டெரன் பிராவோ, சமார் ப்ரூக்ஸ், ரொஸ்டன் சேஸ், சில்டொன் கொட்ரெல், எவின் லூவிஸ், ஷை ஹோப், சிம்ரொன் ஹெட்மயர் மற்றும் நிக்கொலஸ் பூரன் ஆகிய வீரர்கள் இவ்வாறு பாதுகாப்பு நலன் கருதி பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளனர்.

சகலதுறை வீரரான பெபியன் ஆலன் மற்றும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஷேன் டௌரிச் ஆகியோர் தனிப்பட்ட காரணங்கள் கருதி பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான முதல் தொடரான ஒருநாள் சர்வதேச தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகின்ற நிலையில் குறித்த தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணி ஜனவரி 10ஆம் திகதி டாக்கா சென்றடைகிறது.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம்.

கிரேக் பிரத்வெயிட் (அணித்தலைவர்), ஜெர்மைன் பிளக்வூட், க்ரூமாஹ் பொனர், ஜொன் கேம்பல், ரஹ்கீம் கோர்ன்வல், ஜோஸ டி சில்வா, ஸனென் கேப்ரில், கவம் ஹோட்ச், அல்சாரி ஜோசப், கைல் மயர்ஸ், சைன் மொஸ்லி, வீரசாமி பெருமாள், கீமா ரோச், ரைமன் ரெய்பர், ஜொமல் வெரிகன்

மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் சர்வதேச குழாம்.

ஜெசன் மொஹமட், சுனில் அம்பிரிஸ், க்ரூமாஹ் பொனர், ஜோஸ டி சில்வா, ஜஹ்மார் ஹமில்டன், சீமார் ஹோல்டர், அகெல் ஹொஸின், அல்சாரி ஜோசப், கைல் மயர்ஸ், அன்ட்ரே மக்கார்த்தி, ஜோர்ன் ஒட்லேய், ரொவ்மன் பவல், ரைமன் ரெய்பர், ரொமாரியோ செப்ரெட், ஹெய்டன் வோல்ஸ் ஜூனியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *