இந்திய வீரர்கள் பார்த்த இந்த வேலையால் தான் அவர் சதம் விளாசினார். வெளியான காரணம் !

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் நிறைவு பெற்று தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. குறித்த டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையை பெற்றிருக்கிறது. அந்தவகையில் தற்போது நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

இதில் பக்கம் இருக்கும் நிலையில் நான்காவது போட்டியில் இந்திய அணியில் 4 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. மூன்றாவது போட்டியின் போது உபாதைக்கு ஆளாகிய ஆர். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இந்த போட்டியில் விளையாட வில்லை. குறித்த நான்கு வீரர்களுக்கும் பதிலாக மயங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

இவ்வாறான நிலையில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மார்னஸ் லபுஷேனின் அபார சதத்தின் மூலம் 369 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இன்று போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இவ்வாறானதொரு நிலையில் அவுஸ்திரேலியா அணி சார்பாக மார்னஸ் லபுஷேன் சதம் அ டி ப் ப த ற் கு இந்திய அணி வீரர்கள் செய்த இரண்டு தவறு முக்கிய முக்கியமான காரணமாக அமைந்து இருந்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். அதன்படி அவர் 36 ஓட்டங்களுடன் இருந்தபோது சைனி வீசிய பந்தில் ரகானே எளிதான பிடியெடுப்பை தவறவிட்டார்.

அதேபோன்று அரைசதத்தை கடந்த பின்னர் நடராஜன் வீசிய பந்தில் பண்ட் மற்றும் புஜாரா ஆகியோர் இருவரும் இணைந்து ஒரு பிடியெடுப்பை தவற விட்டனர். இந்த இரண்டு தவறுகளுமே மார்னஸ் லபுஷேன் சதம் அ டி க் க காரணமாக அமைந்தது என்று ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *