ஐபிஎல் ஏலத்தில் அணிகளுக்கு தேவையில்லாத ஏலம் எடுத்திருக்கவே கூடாத ஐந்து வீரர்கள் யார் தெரியுமா??

விளையாட்டு

ஐபிஎல் 14வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த 18ஆம் திகதி நடந்து முடிந்தது. இதில் நட்சத்திர வீரர்கள் பலர் அணிகளால் கண்டுகொள்ளப்படவில்லை ஆனால் அணிகளுக்கு தேவைப்படாத ஏலம் எடுத்திருக்கவே கூடாத 5 வீரர்களை ரசிகர்கள் வரிசை படுத்தியுள்ளனர். அவர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பவன் நெகி
பவன் நெகி 2016ஆம் ஆண்டு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் இவரை டெல்லி அணி 8.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால் அவர் அந்தாண்டு 11 போட்டிகளில் விளையாடி 119 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். இவர் கடைசியாக 2018ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு 50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கபட்ட போது அது பேசுப்பொருள் ஆனது. ஆனால் இந்த முறை ஆர்.சி.பி அணி அவரை வாங்கியுள்ளது.

கருண் நாயர்
கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய கருண் நாயர் 4 போட்டிகளில் விளையாடி 16 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். இந்த முறை அவரை கொல்கத்தா அணி ஆரம்ப தொகையான 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. கொல்கத்தா அணியில் ஏற்கனவே சுப்மன் கில், திருப்பாதி, ரானா உள்ளிட்டோர் இருப்பதனால் கருண் நாயர் துடுப்பாட்டத்திற்கு தேவைப்பட மாட்டார்.

சட்டீஸ்வர் புஜாரா
புஜரா இந்தியாவின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர். இவர் கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் ஆரம்ப வீரராக களமிறங்கி தடுமாறி வந்தார். இந்நிலையில் சென்னை அணிக்கு இந்த முறை எப்படி தேவைப்படுவார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இவருக்கு வாய்ப்பு வழங்கினால் டி20க்காக தயாரான ருத்ராஜ், ஜகதீசன், உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும்.

அர்ஜுன் டெண்டுல்கர்
சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் ஏற்கனவே பும்ரா, ஹர்த்திக் பாண்டியா, கருணால் பாண்டியா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதனால் அர்ஜுன் டெண்டுல்கர்க்கு வாய்ப்பு கிடைப்பது என்பது சந்தேகமே. மீறி கிடைத்தால் நெப்போட்டிசம் குற்றச்சாட்டு எழும் என்பதில் சந்தேகம் இல்லை


கேதர் ஜாதவ்.

கடந்த சீசனில் கேதர் ஜாதவின் ஆட்டம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த முறை இவரை ஐதராபாத் அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அணியில் ஏற்கனவே கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளதால் ஜாதவ் தேவைப்படமாட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *