4 நாள் லேட் ஆகிட்டிங்களே பாஸ்.. ஐ.பி.எல் அணி உரிமையாளர்களுக்கு தான் யார் என்பதை நிரூபித்து காட்டிய நியூசிலாந்து வீரர் ! அதற்கு ஆர். அஷ்வின் செய்த காரியம் என்ன தெரியுமா ?

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற மிக முக்கியமான இருபதுக்கு இருபது லீPக் தொடர்களில் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14வது பருவ காலத்திற்கான தொடரானது இந்த வருடம் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் குறித்த தொடரில் வீரர்களை கொள்வனவு செய்வதற்கான ஏலம் கடந்த வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதன்போது 292 வீரர்களுடைய பெயரில் வாசிக்கப்பட்ட நிலையில் அதில் 57 வீரர்கள் மாத்திரம் ஏலத்தின் போது 8 அணிகளினாலும் கொள்வனவு செய்யப்பட்டனர்.

இதில் 22 வெளிநாட்டு வீரர்களும் 35 இந்திய வீரர்களும் கொள்வனவு செய்யப்பட்டனர். இது ஒரு பக்கம் இருக்கின்ற நிலையில் தற்போது அவுஸ்திரேலியா அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது சர்வதேச தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது. இந்தப் போட்டியின் போது நியூசிலாந்து அணி வீரர் டிவோன் கோன்வே 59 பந்துகளில் 3 சிகஸர்கள், 10 பௌண்டரிகளுடன் 99 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அவர் வெறும் ஒரே ஒரு ஓட்டத்தினால் டி20 சதத்தை தவறவிட்டார்.

இவ்வாறு அறிமுகமான போட்டியில் இருந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடிவரும் இந்த வீரர் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தின் போது பதிவு செய்திருந்தார். ஆனால் எந்த அணிகளும் அவரை கண்டுகொள்ளவில்லை. ஐ.பி.எல் ஏலம் நடைபெற்று சரியாக 4 நாட்களில் இவ்வாறு 99 ஓட்டங்களை அவர் விளா சியதன் மூலம் அனைவருடைய கவனமும் இவர் மீது திரும்பியிருக்கிறது.

ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு முன்னர் இந்த போட்டி நடைபெற்று இவர் இவ்வாறு 99 ஓட்டங்களை அ திரடியாக பெற்றிருந்தால் நிச்சயமாக ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணியில் இடம் பெற்றிருப்பார். இவ்வாறானதொரு நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த வீரரை பாராட்டி டுவிட்டர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *