சொல்லவே வெக்கமா இருக்கு !! ஐ.பி.எல் ஏலத்தின் போது எந்த இலங்கை வீரர்களை 8 அணிகளும் தெரிவு செய்யாமைக்கு காரணம் என்ன தெரியுமா ? சங்கக்கார, மஹேல ஓபன் டாக்

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்படுகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல தொடரின் 14ஆவது பருவ காலத்திற்கான தொடரானது எதிர்வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் குறித்த தொடருக்கான வீரர்களை கொள்வனவு செய்வதற்கான சிறிய அளவிலான ஏலம் கடந்த வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்று முடிந்தது.  குறித்த ஏலத்தில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து 9 வீரர்களினுடைய பெயர் இடம்பெற்றிருந்த நிலையிலும் கூட எந்த ஒரு வீரரும் எந்த அணிகளினாலும் கொள்வனவு செய்யப்படவில்லை.

இவ்வாறான நிலையில் இலங்கை வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் புற க்கணிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் அ திருப்தி வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் முன்னாள் அணித்தலைவரான மஹேல ஜெயவர்தன தெரிவிக்கையில்,

‘இலங்கையில் சிறந்த வீரர்கள் இருந்தாலும் ஒருவரும் இந்த முறை ஐ.பி.எல் தொடருக்கு தெரிவாகவில்லை என்பது வ ருத்தம் அளிக்கிறது. ஐ.பி.எல் தொடருக்கான வெளிநாட்டு வீரர்கள் ஏல தெரிவின் போது சகலதுறை வீரர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது இலங்கை அணி வீரர்களிடம் இல்லை என்ற காரணத்தினாலேயே இலங்கை வீரர்கள் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.’ என தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும், தற்போதைய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இயக்குனருமான குமார் சங்கக்கார தெரிவிக்கையில், ‘இலங்கை கிரிக்கெட் அணியின் சுற்றுத் தொடர்கள் குறித்த தெளிவான நிகழ்ச்சித்திட்டம் இல்லாததாலேயே இலங்கை வீரர்களை ஐ.பி.எல் ஏலத்தில் தெரிவு செய்ய முடியாமல் போனது.’

‘ஐ.பி.எல் தொடர் முடிவடையும் வரை முழுவதும் விளையாடக்கூடிய வீரர்களின் வகையிலேயே வீரர்கள் தேர்வு இடம்பெற்றிருக்கிறது. இலங்கை அணியில் இருந்து தெரிவு செய்யப்படுகின்ற வீரர்கள் தேசிய அணிக்கான சுற்று தொடருக்காக எப்போது வேண்டுமானாலும் விடை விலகலாம் என்கின்ற ஐ யம் நிலவுவதாலும் இலங்கை அணி வீரர்கள் இவ்வாறு தெரிவாகவில்லை.’ என சங்கக்கார தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *