பங்களாதேஷ் சுற்றுப்பயணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு !! இதையாவது வெல்லுவிங்களா என ஏங்கும் ரசிகர்கள் !!

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணிக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கும் இடையில் கடந்த வருடம் ஜூலையில் நடைபெறவிருந்த 2 போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடரானது முழு உலகிலும் ஏற்பட்ட கொ ரோனா வைர ஸ் தா க்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் குறித்த ஒத்திவைக்கப்பட்ட தொடர் இந்த வருடம் ஏப்ரல் மாதமளவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில் குறித்த காலப்பகுதியில் தொடர் நடைபெறும் என்ற செய்தியை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த தொடருக்கான போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படாத நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது எதிர்வருகின்ற ஏப்ரல் 12-15 வரையான காலப்பகுதியில் இலங்கை வரவுள்ளது என்ற செய்தியை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் போட்டிகள் அனைத்தையும் ஒரே மைதானத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் அணியின் முக்கிய சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபீசுர் ரஹ்மான் ஆகியோர் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடும் அடிப்படையில் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் இடம்பெறமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் ஆரம்பத்தில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஐ.சி.சி யினுடைய எதிர்கால போட்டியில் அட்டவணையின் படி கடந்த 2020 ஜூலையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்தும் கொ ரோ னா வை ர ஸ் தாக் கம் காரணமாக குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி குறித்த தொடர் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அவ்வேளையில் இலங்கையில் காணப்பட்ட 14 நாட்கள் த னிமை ப்படுத்தல் சட்டத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நிராகரித்ததன் அடிப்படையில் குறித்த தொடர் மீண்டும் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்ட நிலையிலேயே தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஏப்ரலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *