எம்.எஸ் டோனியின் வரலாற்று சாதனையை சின்னா பின்னமாக்கிய விராட் கோஹ்லி !! தலைமையை கற்றுக்கொடுத்த டோனிக்கே முழு பெருமை

விளையாட்டு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவுக்கு வந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றிருந்தது. இவ்வாறான நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் கிடைக்கும் மிக முக்கியமான போட்டியாக அமைந்திருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 – 1 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்று இருக்கிறது.

எதிர்வருகின்ற ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு எந்த அணி தெரிவாக போகிறது என்பதை தீர்மானிக்கின்ற மிக முக்கிய ஒரு தொடராக இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான குறித்த இந்த டெஸ்ட் தொடர் அமைந்திருக்கிறது.

நியூசிலாந்து அணி முன்னதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் விளையாடும் மற்றைய அணி எது என்பதை தீர்மானிக்கின்றது தொடராக இந்த தொடர் அமைந்திருக்கிறது. இவ்வாறான நிலையில் அஹமதாபாதில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து விராத் கோஹ்லி புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

அதாவது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ் டோனியை விட அதிக அளவிலான வெற்றியை பெற்ற அணித் தலைவராக தற்போது விராட் கோஹ்லி மாறியிருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான, பல சாதனைகளை படைத்த மகேந்திர சிங் டோனி இந்திய மண்ணில் 30 டெஸ்ட் போட்டிகளுக்கு அணியை தலைமை தாங்கி 21 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

இவ்வாறான நிலையில் விராட் கோஹ்லி 29 போட்டிகளுக்கு இந்திய அணியை சொந்த மண்ணில் வழிநடத்தி நேற்றைய டெஸ்ட் வெற்றியுடன் 22 வெற்றிகளை பெற்று இவ்வாறு மகேந்திர சிங் டோனியின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *