இப்படி ஒரு சாதனையா ? கிரிக்கெட் உலகில் 71 ஆண்டுகளுக்கு பின்னர் சாதனை படைத்த டீம் இந்தியா !! விராட் சார் நீங்க வேற லெவல் கேப்டன்

விளையாட்டு

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் தொடரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகள் நிறைவு பெற்றிருக்கிறது. இதில் இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி முதல் போட்டியிலும், இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடர் 1-1 என சமநிலைப்பட இருந்தது.

இவ்வாறான நிலையில் இரு அணிகளுக்கும் மிக முக்கியமான ஒரு போட்டியாக மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. தற்போது கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய மைதானம் என பெயர் பெற்றுள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஆனது இரண்டே இரண்டு நாட்களுக்குள் நிறைவுக்கு வந்தது.

டெஸ்ட் போட்டி என்பது ஐந்து நாட்கள் விளையாடக்கூடிய ஒரு போட்டியாகும். இந்த போட்டி இரண்டு நாட்களுக்கு நிறைவு பெறுவது என்பது சாதாரண விடயமல்ல. இரு அணிகளும் இது இன்னிங்ஸ்கள் துடுப்பெடுத்தாட வேண்டிய நிலையிலேயே இவ்வாறு இரண்டு நாட்களுக்குள் போட்டி நிறைவடைந்தது என்பது ஒரு ஆச்சரியமான ஒன்று.

குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சினால் தான் இந்த போட்டியும் 2 நாட்களில் நிறைவுக்கு வந்தது. இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 48 ஓட்டங்களில் மாத்திரம் நிர்ணயிக்கப்பட்டது. குறித்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 71 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டியாக இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *