தம்பி இப்டி செஞ்சிட்டாரு.. ஆத்திரம் இருந்தாலும் இளம் வீரர் இஷான் கிஷன் புகழ்ந்து தள்ளிய ஜேசன் ரோய்… இதுதான் கிரிக்கெட்டுக்கு தேவை – என்ன சொன்னார் தெரியுமா ?

விளையாட்டு

இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தற்போது இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் தொடரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவுபெற்று தற்போது 5 போட்டிகள் கொண்ட இருபது-20 சர்வதேச தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய நிலையில் தற்போது அடுத்த தொடரான டி20 சர்வதேச தொடர் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் மூன்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நான்காவது போட்டி இன்று நடைபெறுகிறது.

அதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி 2-1 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டியின் போது இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்காக அறிமுக டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இஷான் கிஷான் முக்கிய பங்கு வகித்தார். அவர் அந்தப் போட்டியில் அதிரடியாக அரைசதம் கடந்து போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றது கொடுத்திருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய், இந்திய அணிக்காக இரண்டாவது டி20 போட்டியில் அறிமுகம் பெற்று முதல் போட்டியிலேயே அசத்திய இஷான் கிஷானின் ஆட்டம் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில் ‘இஷான் கிஷான் தனது அறிமுக போட்டியிலயே சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

தற்போது இவர் நட்சத்திர வீரராக இருக்கிறார். இவர் அ டித்து அதிரடியாக விளையாடியதில் எந்தொரு வியப்புமில்லை. இவர் தனது திறமையை வெளிக்கொண்டு இருக்கிறார்’ என்று இஷான் கிஷனை பாராட்டி பேசியிருக்கிறார் ஜேசன் ராய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *