என்னதான் சதம் அ டித்தாலும் நான் கடைசி பந்தில் நினைத்தது இதுதான். அது மிஸ் ஆயிடுச்சு – கவலையுடன் பேசி அனைவர் மனதையும் வென்ற சஞ்சு சம்சன்

விளையாட்டு

14வது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்கிறது. தொடரின் நான்காவது லீக் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இறுதி நேரத்தில் வெற்றி பெற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை பரிதாபகரமாக தோல்வியை சந்தித்தது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் கூட அந்த அணியின் தலைவரான சஞ்சு சாம்சன் துடுப்பாட்டத்தில் சதம் விளாசியமை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அவர் 63 பந்துகளில் 7 சிக்சர்கள், 12 பவுண்டரிகளுடன் 119 ஓட்டங்கள் குவித்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

போட்டியில் தோல்வி அடைந்ததன் பின்னர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவரான சஞ்சு சாம்சன் இவ்வாறு தெரிவித்தார். இந்தப் போட்டியைப் பற்றி கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பான போட்டியாக அமைந்தது. இறுதி வரை நாங்கள் வெற்றிக்கு அருகில் நெருங்கி அதிர்ஷ்டமின்றி இந்த போட்டியில் தோற்று விட்டோம்.

இதைவிட நான் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை. கடைசி பந்தினை சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று தான் நான் சரியாகவே டைமிங் செய்தேன். ஆனால் பந்து பவுண்டரி லைனை தாண்டவில்லை இருப்பினும் இதுபோன்ற போட்டிகளில் இது சாதாரணமான ஒன்றுதான்.

இந்த போட்டியில் இந்த டார்கெட் என்பது இந்த மைதானத்தில் சேசிங் செய்யக் கூடிய ஒன்றுதான். இந்த போட்டியில் தோற்றது சற்று வருத்தமாகவே இருந்தாலும் எங்கள் அணியின் வீரர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது என சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *