தெறிக்க விடலாமா !!! இந்த வருஷம் நாங்க கெத்தா இருக்கிறதுக்கு இதுதான் காரணம்.. மாஸ்டர் பிளானை வெளிப்படுத்திய ராக்கட் ஜடேஜா !!

விளையாட்டு

2021ஆம் ஆண்டுக்கால இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தொடர் ஆரம்பமாகி அனைத்து அணிகளும் தங்களுடைய முதல் பகுதி போட்டியில் அதாவது 7 போட்டிகளில் விளையாடி முடித்து இருக்கும் நிலையில் தொடர் மிகவும் சூடு பிடித்துள்ளது. புள்ளி பட்டியலில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய மூன்று அணிகளும் தான் முதல் இடத்திற்காக மிகப்பெரிய போட்டியிட்டு வருகிறது. மூன்று அணிகளும் மாறி மாறி முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது.

கடந்த வருடம் ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் முதல் அணியாக ப்ளேஓப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து படுதோல்வியை சந்தித்த மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை அணி சிறப்பாக விளையாடுவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடைய துடுப்பாட்டம் மிக சிறப்பாக அமைந்திருக்கிறது என அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் மொயின் அலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் வருகையும் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சகலதுறை வீரர் ரவிந்திர ஜடேஜா தங்களது தொடர்ச்சியான வெற்றிக்கு இதுதான் காரணம் என்று கூறியிருக்கிறார். அவர் கூறுகையில் ‘இந்த சீசனில் சிஎஸ்கே பேட்ஸ்மன்கள் தங்களது கடைமையை சிறப்பாக செய்து வருகிறார்கள். இதன் காரணமாக எங்களால் நல்ல ஸ்கோரை பெற முடிகிறது. இதுவே எங்களது வெற்றிகளுக்கு காரணம் என்று நினைக்கிறேன்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *