“இன்னும் கொஞ்சம் பெறுமையாக இருந்திருக்கலாமே நண்பா. கொஞ்சம் அவசப்பட்டு விட்டாயே” !! திஸர பெரேராவின் ஓய்வினால் மனமுடைந்து புகைப்படத்தை வெளியிட்ட சக வீரர்

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சகலதுறை வீரர்களில் ஒருவரான அதிரடி துடுப்பாட்ட வீரரான திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீர் அறிவிப்பினை விடுத்திந்தார். 32 வயதாகும் திசர பெரேரா இந்த அளவு விரைவாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் இலங்கை அணியில் ஏராளமான இளம் வீரர்கள் திறமையுடன் இருக்கிறார்கள், அவர்களுடைய திறமையையும் அணியில் வெளிக்காட்டுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் திஸர பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் சந்திமால், திசர பெரேராவின் ஓய்வு தொடர்பில் அதிர்ச்சி அடைந்ததாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திஸர பெரேரா இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடன் தினேஷ் சந்திமால் உடன் இணைந்து பல போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருடன் விளையாடிய வீரர் என்பதற்கப்பால் அவருக்கு சிறந்த நண்பராக விளங்குகிறார்.

இந்நிலையில் திசர பெரேரா இது தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இன்னும் கொஞ்சம் நீ பொறுமையாக இருந்திருக்கலாம், இதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன். சிறந்த ஆல்ரவுண்டரான உன்னுடன் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. உன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

திசாரா பெரேரா 166 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2338 ரன்களும், 175 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 84 டி20 போட்டிகளில் 1204 ரன்களும், 51 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஆறு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *