பஞ்சாப் கிங்ஸ் அணி மெட்ச்-ல வேண தோக்கலாம்.. ஆனா இந்த விஷயத்துல அவங்க தான் பெஸ்ட் !! சிஎஸ்கே-வுக்கு இதிலும் இரண்டாமிடம் – முழு பட்டியல் உள்ளே

விளையாட்டு

2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 30ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நான்கு வீரர்களுக்கும் கொரோ னா வை ரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டு இருந்தது. இவ்வாறான நிலையில் ஏதேனும் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


தொடரில் சரியாக 29 போட்டிகள் நிறைவடைந்தவுடன் ஐபிஎல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த 29 போட்டிகள் நிறைவில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கெப்பிடல்ஸ் அணி 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இரண்டாவது இடத்தை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக்கொண்டது.

மூன்றாவது இடத்தை விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி கைப்பற்றிக் கொண்டது. கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையில் நடைபெற்று வருகின்ற ஒவ்வொருவருடைய தொடர்களிலும், தொடரில் நடுவர்களின் தீர்ப்புக்கும் மதிப்பளித்து நேர்த்தியான விளையாட்டை வெளிப்படுத்தும் அணிக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள டெல்லி கெப்பிடல்ஸ் அணி இந்த நேர்த்தியான விளையாட்டை வெளிப்படுத்துகின்ற அணிக்கான விருது வழங்கும் பட்டியலில் மூன்றாவது இடத்தை காணப்படுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் 8 போட்டிகளில் விளையாடிய மூன்று போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் காணப்படுகிறது.

இருந்தாலும் நேர்த்தியான விளையாட்டை வெளிப்படுத்துகின்ற அணிக்கான விருதில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் காணப்படுகின்ற மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது நேர்த்தியான விளையாட்டை வெளிப்படுத்துகின்ற அணிகளுக்கான புள்ளி பட்டியலில் அதே இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *