தான் விளையாடிய காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த 5 பந்து வீச்சாளர்களை தெரிவு செய்த கிளேன் மெக்ராத் !! இலங்கையர்களுக்கு பெருமை

விளையாட்டு

தற்போது 50 வயதாகும் கிளேன் மெக்ராத் அவுஸ்ரேலியா அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் 563 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


இதேபோன்று 250 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 381 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதேபோன்று 2 டி20 சர்வதேச போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவர் விளையாடிய காலங்களில் அவுஸ்திரேலிய அணி மிகவும் பலமான ஒரு அணியாக இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது இவர் தான் விளையாடிய காலபருவத்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த 5 பந்து வீச்சாளர்களை தெரிவு செய்துள்ளார்.

வாசிம் அக்ரம்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதே போன்று 356 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி 502 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

பிரெட் லீ
பிரெட் லீ அவுஸ்திரேலிய அணிக்காக 76 டெஸ்ட் போட்டிகளில் 310 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோன்று 221 ஒருநாள் சர்வதேச போட்டியில் 380 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 25 டி20 போட்டிகளில் 28 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன் இலங்கை அணிக்காக பல சாதனைகளை செய்த வீரர். இவர் 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று 350 ஒருநாள் சர்வதேச போட்டியில் 534 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றிய வரிசையில் முதலாவது இடத்திலும் டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களில் முதலாவது இடத்திலும் உள்ளார்.

ஷோன் பொல்லக்
தென்னாபிரிக்காவின் சகலதுறை ஆட்டக்காரரான இவர் 108 டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்டுகளையும், 303 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 393 விக்கெட்டுகளையும், 12 டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

சமிந்த வாஸ்
இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார். இவர் 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுக்களையும், 322 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 400 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவரும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் எனவே இந்த 5 வீரர்களை மெக்ராத் தான் விளையாடிய காலத்தில் சிறந்த 5 பந்து வீச்சாளர்கள் என்று தெரிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *