டோனி அணியும் ஹெல்மட்டில் தேசியக் கொடி இல்லாததன் காரணம் உங்களுக்கு தெரியுமா ?

விளையாட்டு

2004ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் இந்திய முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ் டோனி. மூன்று வகை கிரிக்கெட்டிலும் அணித்தலைவராக திகழ்ந்த எம். எஸ் டோனி 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வந்த அவர் தற்பொழுது ஓய்வு பெற்று ஐ.பி.ல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் இந்திய தேசிய கொடி பொறிக்கப்பட்ட தலைக் கவசத்துடன்தான் விளையாடி வருகின்றனர். மற்ற வீரர்கள் அனைவரும் தேசியக்கொடி பொறிக்கப்பட்ட தலைக் கவசத்துடன் விளையாடி வரும் பொழுது ஏன் தோனி அவ்வாறு செய்யவில்லை என்பது பல கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.

இவ்வாறான நிலையில் அதற்கு தோனியின் நண்பர் கூறிய பதிலை பார்க்கலாம். தோனி துடுப்பெடுத்தாடும் நேரம் மட்டுமல்லாது விக்கெட் காப்பாளராக இருக்கும் பொழுதும் சில நேரங்களில் தலைக்கவசம் அணிவார்.

களத்தடுப்பு செய்யும் நேரத்தில் தலைக்கவசத்தை தரையில் வைத்துவிட்டு விளையாட வேண்டிய சூழல் ஏற்படும். அவ்வாறு வைக்கும் பொழுது பந்து தலைகவசத்தில் பட வாய்ப்பு உள்ளது. மற்ற வீரர்கள் தெரியாமல் மிதித்து விடுவதற்கும் வாய்ப்புண்டு. அது மட்டுமின்றி தலைகவசத்தை தரையில் வைப்பது தேசியகொடியை கீழ் வைப்பது போல் ஆகிவிடும்.

இதன் காரணமாகவே தேசியக்கொடி பொறிக்கப்படாத தலைகவசத்துடன் தோனி விளையாடி வருகிறார் என்று அவர் பதில் சொல்லியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *