வெற்றி படைத்த ஐபிஎல்; வேகப் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா!

2024 ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா காயத்தில் இருந்து மீண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சந்தீப் சர்மா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சந்தீப் சர்மா நான்காவது இடத்தில் உள்ளார்.

சந்தீப் சர்மா அணிக்காக சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறந்த பந்து வீச்சாளர்களின் பட்டியல் – சோஹைல் தன்வீர் – 2008 – 6/14 ஜேம்ஸ் பால்க்னர் – 2013 – 5/20 ஜேம்ஸ் பால்க்னர் – 2013 – 5/16 சந்தீப் சர்மா – 2024 – 5/18 யுசுவேந்திர சாஹல் – 5/2222 இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்களைப் பெற்றது.

16 ஓவர்களில் 151 ரன்களை குவித்த மும்பை அணி கடைசி 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 3 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அடுத்து சேஸிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *