சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு விராட் கோலியை பிடிக்க காரணம் என்ன?? உண்மையை கூறிய ஷேன் வார்ன்!!

விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார் என்பது நன்கு அறிந்ததே. மேலும் கோலிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகள்கள் ஏராளமாக உள்ளனர். ரன் மெஷின் என பலரால் அழைக்கப்படும் விராட் கோலி உண்மையில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறார். 32 வயதாகும் கோலி 251 ஒருநாள் போட்டிகளில் ஆடி 12040 ஒட்டங்களும் 43 சதங்களும் பெற்றுள்ளார். 49 சதங்கள் பெற்றுள்ள சச்சினுக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார்.

டெஸ்ட மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசை பட்டியலில் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வருகிறார் கோலி. இந்நிலையில் இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் அடையாத சாதனையை கூட கோலி பெற்றுள்ளார். அதாவது ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சிறந்த வீரருக்கான மூன்று விருதுகளை ஒரே சமயத்தில் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு ஷேன் வார்ன் சமீபத்தில் பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அதில் இந்திய அணி தலைவர் விராட் கோலியை ஏன் அனைவருக்கு பிடித்துள்ளது என்பது குறித்து தெரிவித்தார்.

இதுகுறித்து வார்ன் கூறுகையில், ‘ஒட்டு மொத்த உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே விராட் கோலியை பிடித்துள்ளது. அதற்கு அவர் எதையும் மறைக்காமல் அவர் மனதில் தோன்றுவதை பேசுகிறார். இது இன்று பலரிடம் இல்லாத குணம் என்றே சொல்லலாம். குறிப்பாக ஆஸ்திரேலியர்களுக்கு அவரிடம் பிடித்த குணம் இதுதான் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *